பச்சை பச்சையா டயலாக்.. அப்பட்டமான காட்சிகள்.. ஆபாசம் நிறைந்த இரண்டாம் குத்து டீசரில் இருப்பது இதான்!

சென்னை: இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து.

அடல்ட் காமெடி படமான இந்த படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி பெரும் ஹிட்டானது.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார் அதன் இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஒன்றாம் தேதி வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

ஆள் உயர வாழைப்பழம்

ஆள் உயர வாழைப்பழம்

அந்த போஸ்டரில் நடுவில் நாயகி உள்ளாடைகளுடன் நிற்க, ஒரு பக்கம் பிக்பாஸ் டேனியல் பாலாஜியும் மறுபக்கம் சந்தோஷும் அந்த இடத்தில் ஆள் உயர வாழைப்பழத்தை வைத்தப்படி போஸ் கொடுத்திருந்தனர்.

என்ன கருமம்டா

என்ன கருமம்டா

அதனை பார்த்த நெட்டிசன்கள் என்னடா இப்படி பச்சையா காட்றீங்க என கழுவி ஊற்றினர். அந்த போஸ்டரை பார்த்து என்ன கருமம்டா இது என தலையில் அடித்துக் கொள்ளாதவர்கள் இல்லை.

ஆடையாய் விழுவது..

ஆடையாய் விழுவது..

இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதனை ஆர்யா இன்று ரிலீஸ் செய்வார் என இதற்கான அறிவிப்பை நடிகர் பிரேம்ஜி நேற்றே வெளியிட்டார். அதில் உள்ளாடை முதற்கொண்டு ஒவ்வொரு ஆடையாய் வெளியே வந்து விழுவது போல் கிராஃபிக்ஸ் செய்யப்பட்டிருந்தது.

பச்சை பச்சையாய் டயலாக்

பச்சை பச்சையாய் டயலாக்

இந்நிலையில் சொன்னப்படியே இன்று மாலை 5 மணிக்கு இரண்டாம் குத்து படத்தின் டீசரை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு பச்சை பச்சையாய் அடல்ட் வசனங்களை தெறிக்கவிட்டுள்ளனர்.

பச்சையாக பதில்

பச்சையாக பதில்

ஆரம்பிக்கும் போதே மொட்டை ராஜேந்திரன் குட்டி கதை சொல்லப் போகிறேன் என கூற, அதற்கு டேனியல் விஜய் முதல் விஜய் சேதுபதி வரை அனைவருமே குட்டி கதைத்தான் சொல்கிறார்கள் என அலுத்து கொள்கிறார். உடனே மொட்டை ராஜேந்திரன் இது அந்த மாதிரி குட்டி கதை இல்லை என படு பச்சையாக பதில் சொல்கிறார்.

பலான டயலாக்

பலான டயலாக்

தொடர்ந்து சந்தோஷ் மற்றும் அரைகுறை உடையில் ஆளை மயக்கும் பெண்கள் காட்டப்படுகின்றனர். படத்தின் நாயகிக்கு பலான டயலாக்கை கொடுத் துவம்சம் செய்திருக்கிறார்கள், சரக்குடன் அவர் ஒப்பிட்டு பேசும் வசனம் சொல்லவே முடியாத அளவுக்கு படு பங்கமாக உள்ளது.

காதை பொத்திக் கொள்ளும்படி

காதை பொத்திக் கொள்ளும்படி

லிப்லாக், படுக்கையறை, நீச்சல்குளம் என புகுந்து விளையாடியிருக்கிறார் சந்தோஷ். இடையிடையே பேய் உருவங்களும் மிரட்டலாக உள்ளது. அந்த பேயை பற்றி டேனியல் விளக்கும் ஒரு டயலாக்கும் காதை பொத்திக் கொள்ளும் படியே பச்சையாக உள்ளது.

ஹீரோ ஃபைனல் டச்

ஹீரோ ஃபைனல் டச்

ஹீராயின் வாழைப்பழம் சாப்பிடுவதை கூட காமம் சொட்ட சொட்ட காட்டியுள்ளனர். அதோடு ஆடைகளைப்பு, ஆணுறுப்பு என மொத்தத்தையும் எந்த குறையும் இல்லாமல் அப்படியே அப்பட்டமாக காட்டியுள்ளனர். கடைசியாக ஒரு வசனம் பேசும் சந்தோஷ், சைட் அடிக்கிறவனுக்கு தடை போடுங்க.. சைட்ட பார்த்து அடிக்கிறவனுக்கு தடை போடாதீங்க என ஃபைனல் டச் கொடுத்திருக்கிறார்.

இதுக்கு பேரு டீசராடா?

அவர் எந்த சைட்டை சொல்கிறார்? எதை அடிப்பதை சொல்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.. மொத்தத்தில் தலைப்பில் ஆரம்பித்த சர்ச்சை ஃபஸ்ட்லுக் போஸ்டரை தாண்டி தற்போது டீசரில் வந்து நிற்கிறது. இந்த டீசரை பார்த்த பலரும் இதுக்கு பேரு டீசராடா என கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X