Just In
Don't Miss!
- Lifestyle
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வருது வருது.. விலகு விலகு.. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு!
சென்னை : இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்து வரும் படம் தான் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு . இப்படம் வரும் டிசம்பர் 6-ந் தேதி வெளியாக உள்ளது.
படம் ரிலீஸாகும் தேதி நெருங்கி விட்டதால், படத்தின் விளம்பர வேலைகள் படு ஜோராக நடந்து வருகிறது. தினமும் ஒரு வசனம், தினமும் ஒரு போஸ்டர் இணையதளத்தில் கலக்கி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

'உயிர் வாழ உழைப்பு உண்டு அந்த உயிருக்கு உத்தரவாதமில்லாத உழைப்பு தான் எங்களுக்கு உண்டு' என்று தற்போது வெளிவந்துள்ள போஸ்டர், உழைக்கும் மக்களின் வலிகளை சொல்லும் நோக்கில் எழுதப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தின் கதை இரும்பு கடையில் வேலை செய்பவர்களையும், ஓட்டுனர்கள் வாழ்க்கையின் வலிகளை சொல்லும் கதையாக உருவாக்கபட்டிருக்கிறது . இந்த படத்தை அறிமுக இயக்குனரான அதியன் ஆதிர் ஆரம்ப கால கட்டத்தில் இரும்புகடையில் வேலை பார்த்து வந்ததாக இசை வெளியீட்டின் போது கூறி இருந்தார். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வாழ்கையை தான் இரும்பு கடையில் வேலை பார்த்தபோது வாழ்ந்து வந்ததாக கூறியிருந்தார். அதன் தாக்கமே இந்த படம் உருவாக காரணம் என்று கூறியிருந்தார்.
"அதுக்கு இப்ப என்ன அவசரம்.. வெயிட் பண்ணலாம்".. பிரபல நடிகையின் கல்யாணகனவில் மண்ணை அள்ளி போட்ட காதலர்
பல நல்ல கலைஞர்களை உருவாக்கும் நோக்கில் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு தலம் செயல் பட்டு வருவதாக இயக்குனர் அதியன் ஆதிரை கூறியிருந்தார் .இயக்குனர் இரஞ்சித் தனது வாழ்வில் பல இன்னல்களை பார்த்து அதை மக்களுக்கு படமாக மாற்ற முயற்சிக்கும் மனிதர்களுக்கு வாய்ப்புகளையும் வாழ்க்கையையும் வழங்கி வருகிறார் .மேலும் இரஞ்சித் சினிமாவில் சாதிக்க முயலும் பலருக்கு உதவி வருகிறார் ,அதற்காக குக்கூ என்ற நூலகத்தையும் சென்னையில் துவங்கி இருக்கிறார்.