இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு நவம்பரில் ரிலீஸ் - வெடிக்குமா புஸ்வானம் ஆகுமா

சென்னை: வட தமிழகத்தின் வாழ்வியலோடு உலக அரசியலையும் இணைத்து படம் பார்ப்பவர்களுக்கு இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு திரைப்படம் நிச்சயம் புது அனுபவத்தை கொடுக்கும் என்று இப்படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை தெரிவித்துள்ளார். இப்படம் வரும் நவம்பரில் உலகம் முழுவதும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு. இந்தப்படத்தில் அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, பிக் பாஸ் புகழ் ரித்விகா, முனிஸ்காந்த், லிஜீஸ் ஆகியேர் நடித்து வருகின்றனர்.

Irandam Ulaga Porin Kadaisi Gundu Movie will be released on November

பரியேரும் பெருமாள் எனும் மாபெரும் வெற்றி படத்திற்கு பிறகு நீலம் புரொடக்ஷன் மூலம் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு. இந்த பட வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் அதே சமயத்தில், இந்தியில் பிர்சா முண்டா என்பவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கி கொண்டிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் தென்மா, பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கப்பட்ட மகிழ்ச்சி, தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் போன்ற ஆல்பங்களுக்கு இசையமைத்தவர். அந்த ஆல்பத்தில் கோட்டா, பீப், டிக் டிக், விவசாயம் என்ற பாடல்களுக்கு இசையமைத்து இருந்தார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்வது கிஷோர், கலை இயக்குநர் த.இராமலிங்கம். படத்தொகுப்பு பணியை மேற்கொள்வது செல்வா. பாடல் வரிகளை உமாதேவி மற்றும் தனிக்கொடி ஆகியோர் எழுதியுள்ளனர். இசை வெளியீடு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி இருந்த நிலையில் தற்போது, படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பா.ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டிருக்கிறார். படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸாகும் என தெரிவிக்க பட்டிருக்கிறது.

அனைவரையும் கவரும் வகையில், ஜனரஞ்சகமான கதையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் வட தமிழகத்தின் வாழ்வியலோடு, உலக அரசியலை இணைத்து படம் பார்ப்பவர்களுக்கு, நிச்சயம் இது புது அனுபவத்தை தரும் வகையில் படம் அமைந்திருப்பதாக படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X