Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இரண்டாம் உலகத்துக்கு யு சான்று... நவம்பர் 22-ல் வெளியீடு!
சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாம் உலகம் படம் வரும் 22-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழுவினர் யு சான்று வழங்கியுள்ளனர்.
ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள 'இரண்டாம் உலகம்' கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்தது. கற்பனை உலகைச் சித்தரிக்கும் வித்தியாசமான படமாக இதனை எடுத்துள்ளார் செல்வராகவன். பாடல்களுக்கு மட்டும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, பின்னணி இசையை அனிருத் அமைத்துள்ளார்.
இந்நிலையில், சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை துறையினருக்கு இப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும், வித்தியாசமான கதைக் களத்துடன் படத்தை எடுத்துள்ள படக்குழுவினரையும் பாராட்டியுள்ளனர்.
செல்வராகவனின் படம் யு சான்று பெறுவது இதுவே முதல்முறை.
தமிழ், தெலுங்கு (வர்ணா) என இரண்டு மொழிகளிலும் வரும் நவ.22-ந் தேதி வெளியிடவுள்ளனர்.