ஜெயம் ரவியுடன் ஜோடி போடப்போகும் வெளிநாட்டு நடிகை.. தீயாய் பரவும் தகவல்!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் ஈரான் நாட்டு நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தனது 25வது படமான புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அந்தப் படத்தை ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கிய லக்ஷ்மண் இயக்கவுள்ளார்.
இதனை தொடர்ந்து தனது 26வது படத்தில் நடிக்கவுள்ளார் ஜெயம் ரவி. இதில் நடிகை டாப்சி ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷியும் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பல விளம்பர படங்களில் நடித்துள்ள எல்நாஸ், இந்தி சீரியல்களிலும் நடித்து வருகிறார். தற்போது முதல் முறையாக தமிழில் நடிக்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications











