twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சில்ட்ரன் ஆஃப் ஹெவன் ரீமேக்.. 'அக்கா குருவி' பிரீமியருக்கு அந்த ஈரானிய டைரக்டர் சென்னை வர்றாராமே!

    By
    |

    சென்னை: சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படம் தமிழில் அக்கா குருவி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    "உயிர், மிருகம், சிந்து சமவெளி, கங்காரு' படங்களை இயக்கியவர் சாமி. இவர் நீண்ட இடை வெளிக்குப் பிறகு இயக்கும் படம், அக்கா குருவி.

    இது, 1997-ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பாராட்டப்பட்ட ஈரானிய படமான, சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் ரீமேக்.

     அடுத்த பயோபிக்... சினிமாவாகுது பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கைக் கதை... யார் நடிக்கிறாங்கன்னு பாருங்க! அடுத்த பயோபிக்... சினிமாவாகுது பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கைக் கதை... யார் நடிக்கிறாங்கன்னு பாருங்க!

    மாளவிகா மோகனன்

    மாளவிகா மோகனன்

    இந்த படத்தை மஜித் மஜிதி இயக்கி இருந்தார். இவர், த லாஸ்ட் வில்லேஜ், த கலர் ஆஃப் பாரடைஸ். த வில்லோ ட்ரீ, த சாங் ஆப் ஸ்பாரோவ்ஸ், முகமது: த மெசெஞ்சர் ஆப் காட் உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். இவர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இயக்கிய படம், பியாண்ட் த கிளவுட்ஸ். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்த இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருந்தார்.

    சமூக ஏற்றத் தாழ்வு

    சமூக ஏற்றத் தாழ்வு

    சில்ட்ரன் ஆஃப் ஹெவன், சகோதரன் சகோதரி இடையே நிலவும் பாசம், சகோதரியின் ஷூ தொலைந்து விடுவதால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், அதை சமாளிக்க அவர்கள் கையாளும் உத்திகள், ஈரானில் நிலவும் சமூக ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றை குழந்தைகளின் பார்வையிலிருந்து சொல்லும் படம்.

    ரீமேக் உரிமை

    ரீமேக் உரிமை

    பல்வேறு சர்வதேச விழாக்களிலும் கலந்துகொண்டு அனைவரையும் நெகிழ வைத்த இந்த படத்தின் தென்னிந்திய, மொழி மாற்றும் உரிமையை, மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை நிறுவனங்கள் பெற்றுள்ளன. தமிழில் இந்தப் படத்துக்கு 'அக்கா குருவி' என்று டைட்டில் வைத்துள்ளனர். சாமி இயக்குகிறார். உப்பல் வி.நாயனார் ஒளிப்பதிவு செய்கிறார்.

    கோடை விடுமுறை

    கோடை விடுமுறை

    முக்கிய கேரக்டர்களான 11 வயது அண்ணன், 7 வயது தங்கையாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் நடிக்கின்றனர். நடனக் கலைஞர் தாரா ஜெகதாம்பா அம்மாவாகவும் செந்தில்குமார் அப்பாவாகவும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு கொடைக்கானல் அருகே நடந்துள்ளது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

    இளையராஜா இசை

    இளையராஜா இசை

    படம் பற்றி சாமி கூறும்போது, படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார். 97 ஆம் ஆண்டு நடக்கும் கதை என்பதால் இளையராஜாவின் சில பாடல்களை பயன்படுத்தி இருக்கிறோம். இந்த ரீமேக்கை, ஒரிஜினலின் இயக்குனர் மஜித் மஜிதி பார்த்தால் சந்தோஷப்படுவார். அந்தளவுக்கு எடுத்திருக்கிறோம். இந்தப் படத்தின் பிரீமியருக்கு மஜித் மஜிதியை அழைத்து வர இருக்கிறோம்' என்றார்.

    English summary
    saamy said that he will be inviting Majid Majidi for the premiere of his film, Akka kuruvi, the remake of 'Children of Heaven'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X