“மாம்பழமாம் மாம்பழம்”.. நம்ம தளபதி பாட்டை ஈரான் ஜிம்மில் எதுக்கு யூஸ் பண்றாங்க பாருங்க!
ஈரான் ஜிம்மில் விஜய் படப் பாடலுக்கு மக்கள் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சென்னை: ஈரானில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் போக்கிரி படத்தில் இடம்பெற்ற 'மாம்பழமாம் மாம்பழம்' பாடலுக்கு மக்கள் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபுதேவா இயக்கத்தில் விஜய், அசின், வடிவேலு, பிரகாஷ்ராஜ், நாசர், நெப்போலியன், ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்திருந்த படம் போக்கிரி. கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் வடிவேலுவின் காமெடியைப் போலவே, பாடல்களும் பெரிதும் பேசப்பட்டது. அனைத்து பாடல்களுமே ஹிட்டானது.

அதிலும் குறிப்பாக 'மாம்பழமாம் மாம்பழம்' பாட்டு பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. இந்த படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்திருந்தார். எப்போது கேட்டாலும் எழுந்து ஆட வைக்கும் அளவிற்கு உற்சாகத்தைத் தருவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
அதனால் தான், நமது நாட்டில் மட்டுமின்றி, ஈரானிலும் இந்தப் பாடல் ஹிட்டாகியுள்ளது. இது தொடர்பாக ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், ஈரான் நாட்டில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சியை தொடங்கும் முன்னர் இந்த பாடலுக்கு நடனமாடி, தங்களை உற்சாகப்படுத்தி கொள்கின்றனர் அவர்கள். ஒருநாள் அல்ல, தினமும் இந்த பாடலுக்கு அவர்கள் நடனமாடுகின்றனர்
தமிழ் பட பாடல் ஒன்று ஈரான் நாடு வரை பிரபலமாகியிருப்பதை கண்டு ஆச்சரியப்பட்ட நெட்டிசன்கள், இந்த வீடியோவை தங்களுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இங்கே நாம் ஏதேதோ மொழி புரியாத ஆங்கிலப் பாடல்களை ஒலிக்க விட்டு, உடற்பயிற்சி செய்வது போல, நமது பாடலை அங்கே அவர்கள் பயன்படுத்துகிறார்கள் போல.


Click it and Unblock the Notifications











