இசையுடன் "இரவின் நிழல்"… சுட சுட சுட்ட பார்த்திபன்.
சென்னை: நையாண்டி நக்கலுக்கு பெயர் போனவர் ஆர் பார்த்திபன். எதைச் செய்தாலும் அதில் அவருடைய தனித்துவம் இருக்கும். அவர் இயக்கும் படங்களில், அவர் தொகுக்கும் நிகழ்ச்சிகளில், அவர் வெளியிடும் வாழ்த்துக்கள் இல் கூட ஒரு புதுமையை புகுத்துபவர்.
தற்போது அவர் இரவில் நிழல் எனும் படத்தை இயக்கி வருகிறார். இது Single shot ல் எடுக்கப்படும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் சம்பந்தமாக வேலைகள் ஒருபுறம் போய்க்கொண்டிருக்க இளையராஜாவை சந்தித்தது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.

எதிலும் வித்தியாசம்
பார்த்திபன் நடிகராக, இயக்குனராக பல வெற்றி படங்களை தந்தவர். அவர் படங்களை வித்தியாசமான அணுகும் முறை அவருக்கு பல ரசிகர்களை பெற்றுத் தந்தது. அவர் பல வித்தியாசமான படங்களை இயக்கியிருந்தாலும் கடைசியாக அவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் அவருக்கு மிகப் பெரும் பெயரை பெற்று தந்தது. வசூலை பொருத்தவரையில் ஒத்த செருப்பு பெரிதாக காலை கடிக்கவில்லை என்றே சொல்லப்பட்டது. பல விருதுகளை வென்ற இந்த படம் ஆஸ்கருக்கு சிறந்த வெளிநாட்டு படம் எனும் கேட்டகிரியில் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டது.

இந்திக்குப் போகும் ஒத்த செருப்பு
விமர்சன ரீதியாக சிலாகித்து பேசப்பட்ட ஒத்த செருப்பு திரைப்படம் இந்திய அளவில் அங்கீகாரம் பெற்று தேசிய விருதையும் வென்றது. தற்போது ஒத்த செருப்பு திரைப்படத்தின் ரீமேக்கில் அபிஷேக் பச்சன் நடித்துள்ளார் அவர் ஒத்த செருப்பு படம் பற்றி பேசுகையில் தான் இதுவரை நடித்த படங்களில் மிகவும் எதிர்பார்க்கும் படம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இரவின் நிழல்
ஒத்த செருப்பு திரைப்படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி வரும் படம் நிலவின் நிழல். Single shot முறையில் எடுக்கப்படும் படம் என்று பல பிரபலங்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். Single shot ல் எடுக்கப்படும் முதல் இந்திய படமாக இது பேசப்பட்டு வருகிறது. ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார்.

பார்த்திபன் சுடச்சுட
இரவின் நிழல் திரைப்படத்தின் வேலைகள் ஒருபுறம் ஜரூராக நடைபெற்று வர இதற்கிடையில் பார்த்திபன் இசைஞானி இளையராஜா அவர்களை சந்தித்துள்ளார். அவரை சந்தித்த மகிழ்ச்சியில் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அதன் கீழ் " இன்று காலை இப்பொழுது... ச்சுட...ச்சுட ஆசை கல்லில் இருந்து அப்படியே தட்டில் விழுந்தது ' என மகிழ்ச்சி துள்ள எழுதியுள்ளார். கருத்துக்களை பகிர்வதில் சோசியல் மீடியாயாவை அணுகுவதிலும் தேர்ச்சி பெற்ற ஒரு திறமைசாலியாக பார்த்திபன் மாறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











