Rekha Nair: 3 முறை தற்கொலை முயற்சி.. முதல் கணவரை பிரிய காரணம் இதுதான்.. ரேகா நாயர் பேட்டி!

சென்னை: நடிகை ரேகா நாயர் தனது முதல் கணவரை பிரிந்ததற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார்.

சர்ச்சைக்குரிய நடிகை என பெயர் எடுத்த ரேகா நாயர், விஜய் தொலைக்காட்சியில் ஆண்டாள் அழகர் என்ற தொடரின் மூலம் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார்.

பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலராலும் பாராட்டப்பட்டார்.

Iravin Nizhal actress Rekha Nair Opens up about his first divorce

சர்டிபிகேட்களை கிழித்தார்: நடிகை ரேகா நாயர் அண்மையில் அளித்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறது. அதில், நான் மூன்று முறை தற்கொலை முயற்சி செய்து இருக்கிறேன். அதன் பிறகுதான் என் வாழ்க்கையை மாற்றிக்கொண்டேன். ஐஎஸ்ஏ தேர்வு எழுவதற்காக டெல்லி போகும் போது என் கணவர் சர்டிபிகேட் அனைத்தையும் கிழித்துவிட்டார்.

எனக்குள் இருக்கும் பூதம்: அப்போ, என் சர்டிபிகேட்டை கிழிக்க நீ யாருனு, நிறைய டிகிரி படிக்க ஆரம்பித்தேன். என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் நேரத்தில் தான் எனக்குள்ள ஒரு பூதம் இருக்கு என்பதை புரிந்து கொண்டேன். அன்னைக்கு செத்து போய் இருந்தால், அடையாளமே தெரியாமல் போய் இருப்பேன். ஆனால், இன்னைக்கு என்னை பத்து பேருக்கு தெரிகிறது.

கவலை இல்ல: இனி வாழ்க்கையை பற்றி கவலை இல்லை, யார் என்ன வேண்டுமானாலும், எவ்வளவு கேவலமானாலும் பேசட்டும், எதை பற்றியும் எனக்கு கவலை இல்லை என்று தீர்மானமான ஒரு முடிவு எடுத்து என் முதல் கணவரை பிரிந்தேன் இப்போது வாழ்க்கையில் எந்தவிதமான கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

நான் உண்மையை பேசுகிறேன்: மேலும், சினிமாவில் நடித்து பிரபலமாக வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்த சமுதாயத்திற்கும் நான் உண்மையானவளாக இருக்கிறேன். இந்த உலகத்தில் இருப்பவர்கள் அனைவரும் பொய் பேசுகிறார்கள், நான் உண்மை சொல்வதால் அதை அதிகம் பேர் கேட்கிறார்கள் என்று நடிகை ரேகா நாயர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X