Rekha nair: 17 வயசில் கல்யாணம்...வீடு வீடா பேப்பர் போட்டேன்..ரேகா நாயர் பேட்டி!

சென்னை: 17 வயதில் படித்துக்கொண்டு இருக்கும் போதே எனக்கு திருமணமாகிவிட்டது என்று நடிகை ரேகா நாயர் தனது வாழ்க்கையில் கடந்து வந்த கஷ்டங்களை மனம் திறந்து பேட்டியில் கூறியுள்ளார்.

சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் வம்சம், பகல் நிலவு, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் பால கணபதி போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

Iravin Nizhal actress Rekha Nair opens up about his personal life

பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

நடிகை ரேகா நாயர்: இரவின் நிழல் படத்தில் நடிகை ரேகா நாயர் ஒரு பக்க மார்பகம் தெரியும்படி நடித்திருந்தார். இதற்கு ஒரு தரப்பில் இருந்து பாராட்டு குவிந்த நிலையில், மறுபக்கம் பெரும் விமர்சனம் எழுந்தது. ரேகா நாயர் அரைநிர்வாணமாக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலில் படுமோசமாக பேசி இருந்தார்.

பயில்வானை விளாசிய ரேகா நாயர்: பயில்வானின் பேச்சால் டென்ஷனான ரேகா நாயர்,பயில்வான் ரங்கநாதன் தினமும் வாக்கிங் போகும் திருவான்மியூர் பீச்சில், அவரை மடக்கி மடக்கி, நான் எப்படி வேண்டும் என்றாலும் நடிப்பேன். அதைக் கேட்க உனக்கு என்ன தகுதி இருக்கு? நான் என்ன பொண்ணா... இல்ல உன் பொண்டாட்டியா? புடிச்சா பாரு இல்லைனா போ... ஏதுவும் தெரியாம இனிமே நீ பேசுனா செருப்பு பிஞ்சிடும் என பயில்வானை அடிக்க பாய்ந்தார். பயில்வானிடம் யாரும் பேச தயங்கும் நிலையில், ரேகா துணிந்து பேசியதை பலரும் பாராட்டினார்கள்.

17வயதில் திருமணம்: இந்நிலையில், ரேகா நாயர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது வாழ்க்கையில் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். அதில், நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கும் போது, அதாவது 17வயதில் எனக்கு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த வேகத்திலேயே எனக்கு விவாகரத்தும் நடந்துவிட்டது.

வீடு வீடா பேப்பர் போட்டேன்: என் குடும்பத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தும், குடும்பம் நடத்துவது சிரமமாகவே இருந்தது. இதனால், வீடு வீடா சென்று பேப்பர் போட்டு இருக்கிறேன். எனக்கு 10பவுனோ, 5 பவுனோ இல்லை இரண்டு பவுன் நகை போட்டு கல்யாணம் செய்துவைக்க முடியாத சூழ்நிலை. நிலத்தை விற்று கல்யாணம் செய்யணுமா, அதற்குபின் அம்மா அப்பா என்ன செய்வார்கள் என்று யோசித்தேன்.

இரண்டாம் திருமணம்: அம்மா, அப்பா யாரை கல்யாணம் பண்ணிக்க சொறாங்களோ அவங்களை திருமணம் பண்ணிக்கிட்டேன் அந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு சீக்கிரமாக முடிந்துவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன் என்று நடிகை ரேகா நாயர் அந்த பேட்டியில் கூறியுள்ளர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X