வாய் வெல்லாது.. வாய்மையே வெல்லும்.. மீண்டும் பார்த்திபனை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: இரவின் நிழல் படம் உலகின் இரண்டாம் சிங்கிள் ஷாட் நான் லீனியர் என அமேசான் பிரைம் மற்றும் IMDBல் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஸ்க்ரீன் ஷாட் போட்டு மீண்டும் பார்த்திபனை சீண்டி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
பார்த்திபனின் இரவின் நிழல் ஓடிடியில் வெளியான நிலையில், ரசிகர்கள் பலரும் பார்த்திபனின் பெரிய முயற்சியை பாராட்டி வருகின்றனர்.
ஆனால், மீண்டும் அந்த பழைய பிரச்சனையையே ப்ளூ சட்டை மாறன் கிளப்பி இருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

அமேசான் பிரைமில் இரவின் நிழல்
பார்த்திபன் இயக்கி நடித்த சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படமான இரவின் நிழல் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இரவின் நிழல் ஓடிடியில் வெளியான நிலையில், ரசிகர்கள் #IravinNizhal ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து பார்த்திபனின் பெரும் முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

பார்த்திபனுக்கு பாராட்டு
இரவின் நிழல் படத்தை ஓடிடியில் இறுதியாக பார்த்து விட்டேன். என்னவொரு பர்ஃபார்மன்ஸ். உலகின் முதல் சிங்கிள் ஷாட் படம் சூப்பரா இருக்கு என இந்த ரசிகர் பார்த்திபனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசை, படத்திற்காக போட்டிருக்கும் உழைப்பிற்காகவே படத்தை பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

18 பிளஸ் படம்
இரவின் நிழல் படத்தில் ஏற்கனவே நாயகி பிரிகிடா சாகா நிர்வாணமாக நடித்திருந்தார் என சர்ச்சைகள் கிளம்பின. இந்நிலையில், ஓடிடியில் படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த படம் 18 பிளஸ் கண்டிப்பா குழந்தைகளுடன் படத்தை பார்த்து விடாதீர்கள் என எச்சரித்துள்ளனர்.

வாய் வெல்லாது
இரவின் நிழல் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் இல்லை என்றும் இயக்குநர் பார்த்திபன் பொய் சொல்லி விளம்பரப்படுத்தினார் என்றும் அமேசான் பிரைமில் இடம்பெற்றுள்ளதாக வெளியாகி உள்ள ஸ்க்ரீன்ஷாட்டுகள் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதனை ஷேர் செய்து ப்ளூ சட்டை மாறன், " வாய் வெல்லாது. வாய்மையே வெல்லும். " என பார்த்திபனை விளாசித் தள்ளி உள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் இயக்கினாரா
அமேசான் பிரைமில் இரவின் நிழல் படத்துக்கு இப்படி ட்ரிவியா இருக்கு என விமர்சிக்கப்பட்டு வரும் ரசிகர்கள், இந்த படத்தையே ப்ளூ சட்டை மாறன் தான் இயக்கினார் என ரசிகர்கள் எடிட் செய்து வெளியிட்டுள்ள ஸ்க்ரீன் ஷாட்டுகள் டிரெண்டாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











