இரவின் நிழல் படத்தில் ஆபாச வசனங்கள் கொட்டிக் கிடக்கின்றனவா? பரபரக்கும் தகவல்கள்.. என்ன ஆகப் போகுதோ?
சென்னை: சிங்கிள் ஷாட்டில் 95 நிமிடங்கள் ஓடக் கூடிய உலகின் முதல் நான் லீனியர் படத்தை இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்து அசத்தி உள்ளார்.
சமீபத்தில் அதன் அட்டகாசமான டீசர் வெளியானது. அதை விட டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அதற்கு ஏ.ஆர். ரஹ்மான் கொடுத்த ரியாக்ஷன்களையும் நெட்டிசன்கள் போட்டு பார்த்திபனை ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஒரே நடிகர்
வித்தியாசமான முயற்சிகளை சினிமாவில் பரிசோதனை செய்து பார்ப்பது தான் உண்மையான சினிமா கலைஞனுக்கான அடையாளம். அதில், நடிகர் பார்த்திபன் வித்தகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஒத்த செருப்பு படத்தில் ஒரே ஒரு நடிகராக நடித்து ஒட்டுமொத்த படத்தையும் புரிய வைத்து பிரம்மிக்க வைத்தார். ஆஸ்கர் போட்டி வரை அந்த படத்தை அனுப்பி வைத்து பலரது பாராட்டுக்களை அள்ளினார் பார்த்திபன்.

சிங்கிள் ஷாட்
ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு ஆஸ்கர் கிடைக்காத நிலையில், தற்போது அந்த விருதை எப்படியாவது தட்டிப் பறித்து விட வேண்டும் என்கிற முயற்சியில் அடுத்து ஒரு உலக சாதனை படத்தை இயக்கி நடித்துள்ளார் நடிகர் பார்த்திபன். ஒரே சிங்கிள் ஷாட்டில் 95 நிமிடங்கள் ஓடக் கூடிய உலகின் முதல் படத்தை எடுத்து அசத்தி உள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசை
இரவின் நிழல் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அதன் இசை தரம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகவும் இந்த படத்தில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானை இசையமைக்க வைத்துள்ளார். மேலும், ஆஸ்கர் வென்ற மூவர் இந்த படத்தில் பணியாற்றி உள்ளனர்.

என்ன கதை
உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமான இரவின் நிழல் படத்தின் கதை என்ன என்பது அதன் டீசரிலேயே தெளிவாக புரிகிறது. வயதான பார்த்திபன் தனது வாழ்வில் குழந்தை பருவம் முதல் வளர்ந்து இந்த இடத்திற்கு வந்தது வரை நினைத்து பார்க்கும் ஃபிளாஷ்பேக் காட்சிகள் அடங்கிய படமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

23வது டேக்கில் ஓகே
64 ஏக்கல் நிலத்தில் சுமார் 50 செட்கள் போடப்பட்டு இந்த படத்தின் படப்பிடிப்பை பல நாட்கள் ரிஹர்ஸல் செய்து ஒரு வழியாக ஷூட்டிங்கிற்கு சென்றாராம் நடிகர் பார்த்திபன். ஆனால், ஒருவர் மிஸ்டேக் செய்தால் கூட படத்தை முதலில் இருந்து எடுத்தால் மட்டுமே சிங்கிள் ஷாட் படம் என்கிற சாதனையை படைக்க முடியும் என்பதால், 22 டேக்குகளுக்கு பிறகு 23வது டேக்கில் படம் நிறைவடைந்ததாக கூறுகின்றனர். 95 நிமிடங்கள் பல நாட்கள் அனைத்து நடிகர்களும் அப்படியே நடித்ததில் இந்த படம் உருவாகி உள்ளது.

ஆபாச வசனங்கள்
இந்த படம் வெளியானால் உலகளவில் மிகப்பெரிய பேசு பொருளாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்நிலையில், படத்தில் ஏகப்பட்ட ஆபாச வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் தான் படத்திற்கு ஏதாவது சிக்கலை உண்டாக்குமா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது.

பார்த்திபன் பதில்
இதுதொடர்பாக ரசிகர் ஒருவர் நடிகரும் இயக்குநருமான பார்த்திபனிடம் சிங்கிள் ஷாட் படம் என்பதால் சென்சார் எந்த காட்சியையும் கத்தரிக்க முடியாது. ஆனால், வசனங்கள் சிலவற்றை மியூட் செய்யும் வாய்ப்பு உள்ளதா? என்கிற கேள்விக்கு பார்த்திபன் 'ஆமாம்' என பதில் அளித்துள்ளது மேலும், பரபரப்பை கிளப்பி உள்ளது. அதிகமான ஆபாச வசனங்கள் இடம்பெற்று பல காட்சிகள் ஊமைப் படங்களாக மாறிவிடுமா? என்கிற கேள்விகளும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











