துபாயில் இர்பான் - கீர்த்தி சுரேஷ் சந்திப்பு.. வெளியான செம புகைப்படம்.. குவியும் கமெண்ட்டுகள்!
சென்னை: குக் வித் கோமாளி பிரபலம் யூடியூபர் இர்பான் நடிகை கீர்த்தி சுரேஷுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். வகை வகையான உணவுகளை ருசித்து பார்த்து யூடியூபில் அதற்கு ரிவ்யூ சொல்லி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் இர்பான்.
கமல்ஹாசன், விஜய், உதயநிதி ஸ்டாலின், ஐஸ்வர்யா ராஜேஷ், பிக் பாஸ் மாயா, சிவாங்கி என பல பிரபலங்களை அசால்ட்டா சந்தித்து வீடியோக்களை வெளியிட்டு வரும் இர்பான் சமீபத்தில் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை ஜெண்டர் ரிவீல் பார்ட்டி மூலம் சொல்லி வீடியோ வெளியிட்டு எக்கச்சக்க வியூஸ் அள்ளிய நிலையில், அவருக்கு எதிராக வழக்கு பாய்ந்தது.

துபாயில் பாலினத்தை அறிந்துக் கொண்டாலும் அதை தமிழ்நாட்டில் வீடியோவாக வெளியிட்டு அறிவித்ததே குற்றம் தான் என சட்டம் சொல்லும் நிலையில், அந்த சட்டப் பிரிவின் கீழ் இர்பான் மீது நடவடிக்கை பாயும் எனக் கூறப்பட்டது.
மன்னிப்பு கேட்ட இர்பான்: ஆனால், தனது ஜெண்டர் ரிவீல் பார்ட்டி வீடியோவை டெலிட் செய்து விட்டு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிடுவதாக இர்பான் சொன்ன நிலையில், அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என சுகாதரத்துறை அறிவித்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஏகப்பட்ட விமர்சனங்களும் விவாதங்களும் நடைபெற்றன.
நீயா நானாவில் விவாத நிகழ்ச்சி: விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக இர்பான் பங்கேற்று வரும் நிலையில், அவருடைய டிரெண்டிங்கான மேட்டரை வைத்து நீயா நானா நிகழ்ச்சியில் பெரிய விவாதமே நடைபெற்று இந்த வாரம் ஒளிபரப்பானது. குழந்தை பேற்றை கொண்டாடுபவர் vs அதை விமர்சிப்பவர் என நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கீர்த்தி சுரேஷுடன் இர்பான்: அடிக்கடி துபாய்க்கு சென்று வரும் இர்பான் தற்போது துபாயில் விழா ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த பலரும் கொடுத்து வச்சவன் இர்பான் என்றும் எங்கேயோ பெரிய மச்சம் இருக்கு என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











