அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான்!

By Vignesh Selvaraj

மும்பை : பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் பிரபலமானவர் இர்ஃபான் கான். இவர் நடித்திருந்த 'ஜுராசிக் வேர்ல்ட்', 'லைஃப் ஆப் பை' ஆகிய படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனவை.

இந்நிலையில் இர்ஃபான் கான் தற்போது ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தனக்கு ஒரு அரிய வகை நோய் வந்திருப்பதாகவும், அது உறுதியானதும் நானே ஒரு வாரம் கழித்து அறிவிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இர்ஃபான் கான்

இர்ஃபான் கான்

பாலிவுட்டின் பிரபல நடிகரான இர்பான் கான், 'ஜுராசிக் வேர்ல்ட்' உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இர்ஃபான் கான் கடந்த 15 நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

அரிய வகை நோய்

அரிய வகை நோய்

தான் ஓர் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் இர்ஃபான் கான். நான் விட்டுக் கொடுக்காமல் போராடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அறிவிப்பு

ட்விட்டரில் அறிவிப்பு

இதுதொடர்பாக இர்ஃபான், தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, 'ஓர் அரிய வகை நோய் என்னை தாக்கியிருக்கிறது. அதுபற்றிய விபரம் தெரியவில்லை. அது எந்த மாதிரியான நோய் என்பதை கண்டறிந்து உறுதி செய்ததும் நானே அறிவிக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இதையடுத்து அதிர்ச்சியடைந்த ஏராளமான ரசிகர்கள், இர்ஃபான் கான் விரைவில் குணமடைய வேண்டும் என கடவுளிடம் வேண்டுவதாக தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X