விஜய்யாக மாறிய இர்ஃபான் பதான்.. ’விக்ரம் 58’ குறித்து என்ன சொன்னார் தெரியுமா?
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் சீயான் விக்ரமின் 58வது படத்தில் நடித்து வரும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் தனது முதல் ஷெட்யூல் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
சென்னை: டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக சீயான் விக்ரமின் 58வது படத்தை இயக்கி வருகிறார்.
கடாரம் கொண்டான் படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்து வரும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விக்ரம் 58 குறித்த முக்கிய அப்டேட்டை கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விக்ரம் 58
இந்த படத்தை, வியாகாம் 18 மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரித்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கே.ஜி.எஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார். பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் கான் வில்லனாக சினிமா துறையில் காலடி வைத்துள்ளார்.

த்ரில்லர் கிங்
கடந்த 2015ம் ஆண்டில் அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்ட்டி காலனி படத்தை இயக்கி ஹிட் அடித்த அஜய் ஞானமுத்து, அடுத்ததாக, நயன்தாரா, விஜய்சேதுபதி, அனுராக் காஷ்யாப், அதர்வா மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் உருவான இமைக்கா நொடிகள் படம் மூலம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'விக்ரம் 58' படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.

கிரிக்கெட் டு சினிமா
இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்து வந்த இர்ஃபான் பதானை முதன் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார் அஜய் ஞானமுத்து. விக்ரம் 58 படத்தில் மாஸ் காட்டும் ஸ்டைலிஷ் வில்லனாக இர்ஃபான் பதான் நடித்து வருவதாக தகவல்கள் லீக்காகியுள்ளன. ஸ்டேடியத்தில் விளையாண்ட இர்ஃபான் பதான், விரைவில் சினிமா தியேட்டர்களில் தனது வெறித்தனமான விளையாட்டை காட்டவுள்ளார்.

விஜய் ஸ்டைல்
துப்பாக்கி படத்தில் நடிகர் விஜய் சொல்லும் மாஸ் வசனம் I'm Waiting. அந்த வசனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தொடர்ந்து தனது படங்களில் நடிகர் விஜய் அந்த வசனத்தை கூறி வந்தார். தற்போது, விக்ரம் 58 படத்தில் தனது முதல் கட்ட ஷூட்டிங் முடிந்தது குறித்து பதிவிட்டுள்ள இர்ஃபான் பதான் விஜய் ஸ்டைலில் I'm waiting என பதிவிட்டுள்ளார்.
என்ன ட்வீட்
"வணக்கம் மக்களே.. நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி.. முதல் schedule நல்லபடியா முடிஞ்சாச்சு.. மீண்டும் எல்லாரையும் சந்திக்க "I'm waiting" #ChiyaanVikram58" என இர்ஃபான் பதான், பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











