கோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா? ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ?
சென்னை: சியான் விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்து வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கதாபாத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மிரட்டி வருகிறது.
நடிகர் இர்பான் பதான் இந்த படத்தில் பணக்கார வில்லனாக இருப்பார் என நினைத்தால், இயக்குநர் இப்போ சூப்பரான ட்விஸ்ட் வைத்துள்ளார்.
ஆனால், ஏற்கனவே பாலிவுட்டில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற அந்த பிரபல படத்தின் கதை போலவே கோப்ரா படமும் இருக்குமோ என்கிற அச்சமும் எழுகிறது.

இர்பான் பதானுக்கு பிறந்தநாள்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுக்கு நேற்று 36வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 2003ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக பந்து வீசி பந்து வீச்சாளராக அறிமுகமானார் இர்பான் பதான். பவுலிங்கில் ஆல் ரவுண்டர் ஆன இவர், தற்போது சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

பிறந்தநாள் பரிசு
இர்பான் கானின் பிறந்தநாளை முன்னிட்டு கோப்ரா படக்குழு அட்டகாசமான அவரது கேரக்டர் லுக் போஸ்டரை வெளியிட்டு அசத்தியது. சியான் விக்ரம், ஸ்ரீனிதி ஷெட்டி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கோப்ரா படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இறுதி கட்ட படப்பிடிப்புகள் மட்டுமே மிச்சம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன ரோல்
நடிகராக மாறியுள்ள இர்பான் பதான், சியான் விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்து வரும் தகவல் அறிந்ததும், பெரிய பிசினஸ் மேன் வில்லனாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஜய் ஞானமுத்து இர்பான் பதானுக்கு பிரெஞ்சு இன்டர்போல் அதிகாரி அஸ்லான் இல்மாஸ் (Aslan Yilmaz) என்கிற கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார்.

கேரிங் பர்சன்
இர்பான் பதானின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கேரக்டர் லுக் போஸ்டரை வெளியிட்ட கோப்ரா பட இயக்குநர் அஜய் ஞானமுத்து, பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். உங்களை போன்ற கேரிங் பர்சனை சந்தித்ததிலும் உங்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததிலும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

அந்த படத்தின் கதையா?
இர்பான் பதான் போலீஸ் அதிகாரியாக கோப்ரா படத்தில் நடிக்கிறார் என்பது ரிவீல் ஆகி உள்ள நிலையில், இந்த படம் ஹிரித்திக் ரோஷன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான தூம் 2 படம் மாதிரி இருக்குமா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏற்கனவே ஏகப்பட்ட விக்ரம் கேரக்டர்களை பார்க்கும் போதே ரசிகர்களுக்கு அந்த படத்தின் ஞாபகம் வந்த நிலையில், தற்போது மீண்டும் அது உறுதி ஆவது போல இருக்கிறது. வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











