விக்ரம் 58 அப்டேட்: விக்ரம் உடன் நடிப்பது பெருமையான விசயம் - கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்
Recommended Video
சென்னை: நடிகர் விக்ரம் நடிக்கும் விக்ரம் 58 திரைப்படத்தில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை இர்ஃபான் பதானும் உறுதி செய்து, விக்ரம் உடன் இணைந்து நடிப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
கடாரம் கொண்டான் படத்துக்கு பிறகு நடிகர் சீயான் விக்ரம் நடிக்க இருக்கும் படத்திற்கு விக்ரம் 58 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது .இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து பின் டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்குகிறார் என அதிகார பூர்வ தகவல் வெளியானது.

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இது விக்ரம் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்கள் இடையிலும் பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது. ஹாரர் திரில்லர், திர்ல்லர் என இரு படங்களையும் த்ரில்லர் ஜார்னரிலே இயக்கி இருந்தார் அஜய் ஞானமுத்து.
அதேபோல் இப்படமும் சீட் எட்ஜ் த்ரில்லராகத் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக தேர்வாகி இருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவர் இப்படத்திலிருந்து விலகியுள்ளார். இதனால் புதிய கதாநாயகியை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 2020ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை வயாகாம் 18 ஸ்டூடியோவுடன் இணைந்து லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.
தற்போது படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது முன்னாள் இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனை இப்படத்தின் இயக்குநரான அஜய் ஞானமுத்து இதனை தன் டீவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இர்ஃபான் பதான் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டேவையும் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த இர்ஃபான் பதானும் பதிலுக்கு, இப்படத்தில் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.
நான் சில ரியாலிட்டி ஷோக்களில் நடித்திருக்கிறேன். சினிமா எனக்கு புதிய உலகம். அஜய் ஞானமுத்து என்னிடம் வந்து கதை சொன்னார். நான் எதற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கேட்டேன். நடித்தால் எப்படி இருக்கும் என்று சொன்னதை கேட்ட உடன் நடிக்க சம்மதித்தேன். விக்ரமுடன் நடிப்பது பெருமையான விசயம். ஏராளமான பார்வையாளர்கள் முன்பு கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். சினிமாவில் நடிக்க பதற்றமில்லை இருந்தாலும் ரீடேக் வாங்குவேன் என்று கூறியுள்ளார் இர்ஃபான் பதான்.
தமிழ் சினிமாவில் கிரிக்கெட் வீரர்கள் நடிப்பது புதிதல்ல. ஏற்கனவே, சடகோபன் ரமேஷ் சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதேபோல் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்தும் மலையாளப் படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.
தற்போது அவர் ஹன்சிகா நடிக்கும் தமிழ் படத்தில் ஸ்ரீசாந்த் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த வரிசையில், இப்போது இர்ஃபான் பதானும் தமிழ் படத்தில் நடிக்க முன் வந்துள்ளது அவருடைய கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











