கோப்ரா சூட்டிங்கை முடித்த பிரபல கிரிக்கெட் வீரர்... அறிமுக படம் குறித்து மகிழ்ச்சி

சென்னை : நடிகர் விக்ரம் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கோப்ரா.

இந்த படத்தின் சூட்டிங்கை நடிகர் விக்ரம் கடந்த ஜனவரி மாதத்தில் முடித்தார்.

இந்நிலையில் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துவரும் பிரபல கிரிக்கெட் வீரரும் படத்தின் சூட்டிங்கை முடித்துள்ளார்.

கோப்ரா படம்

கோப்ரா படம்

நடிகர் விக்ரம் -இயக்குர் அஜய் ஞானமுத்து இணைந்துள்ள படம் கோப்ரா. சைக்கலாஜிக்கல் திரில்லராக இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், மிருனாளினி, கனிகா, ஷானி சென் போன்ற பலர் நடித்துள்ளனர்.

3 மொழிகளில் வெளியீடு

3 மொழிகளில் வெளியீடு

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, கேரளா, ரஷ்யா போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது.

20 கெட்டப்புகள்

20 கெட்டப்புகள்

படத்தில் விக்ரம் 20க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங்கை அவர் கடந்த ஜனவரி மாதத்திலேயே முடித்துக் கொடுத்துள்ளார். தற்போது விக்ரமின் மகான் படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கோப்ரா படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரசிகர்கள் ஆவல்

ரசிகர்கள் ஆவல்

முன்னதாகவே கோப்ரா படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுந்து காணப்பட்டது. மகான் படத்தை காட்டிலும் கோப்ரா படத்திற்கான எதிர்பார்ப்பே அதிகரித்திருந்தது. இந்நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களும் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்க காரணமாக அமைந்துள்ளது.

முக்கிய கேரக்டரில் இர்பான் பதான்

முக்கிய கேரக்டரில் இர்பான் பதான்

படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் அஸ்லான் யில்மாஸ் என்ற துருக்கி இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தனது காட்சிகளை முடித்துக் கொடுத்துள்ளதாக அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

சூட்டிங்கை முடித்த இர்பான்

சூட்டிங்கை முடித்த இர்பான்

படப்பிடிப்பு தளத்தில் இர்பானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், இர்பானை போன்ற அன்பான நபருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி என்றும் இது ஒரு மறக்க முடியாத பயணம் என்றும் தெரிவித்துள்ளார்.

முதல் படத்திலேயே சிறப்பான டீம்

முதல் படத்திலேயே சிறப்பான டீம்

இதற்கு பதிலளித்துள்ள இர்பான் பதான், முதல் முறையாக தமிழ் சினிமாவில் இந்த பயணத்தை அளித்ததற்கு நன்றி என்றும் தனது முதல் படத்திலேயே இத்தகைய அற்புதமான டீமுடன் செயல்பட தனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் பெரிய திரையில் அஸ்லானை பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X