Irfan: தொப்புள் கொடி வீடியோ.. வருத்தம் தெரிவித்த இர்பாஃன்.. இதே வேலையா போச்சு.. தண்டிக்கணும்!

சென்னை: புட் ரிவ்யூவரான இர்பாஃன், கடந்த வாரம் தனது சேனலில் மனைவியின் பிரசவ அறை வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அவர் தொப்புள் கொடியை வெட்டுவது இடம் பெற்று இருந்தது பெரும் சர்ச்சையானது.அதற்கு இர்பாஃன் வருத்தம் தெரிவித்து மருத்துவத் துறைக்கு கடிதம் எழுதி உள்ளார்.

யூடியூபரான இர்பாஃனுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிபா என்பவரை திருமணம் செய்து செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் இர்பாஃன், உணவு வீடியோவை குறைத்துக்கொண்டு, திருமண வீடியோ, மனைவியுடன் வெளிநாடு சென்ற வீடியோ, மனைவி உடன் சேர்ந்து சமைத்த வீடியோ, மனைவியுடன் சாப்பிடும் வீடியோ என அனைத்தையும் பதிவிட்டு வந்தார். இதற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்ததால், தொடர்ந்து அதுபோன்ற வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

youtuber irfan letter

இர்பாஃன்: அப்போது தான் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்தார். இதற்கு வாழ்த்துக்கள் குவித்தன. இதைத்தொடர்ந்து, தனக்கு பிறக்க உள்ள குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை டெஸ்ட் எடுத்து தெரிந்துகொண்டு அதை அந்த விழாவில் அறிவித்தார். இந்தியாவில் இது சட்டப்படி குற்றம் என்பதால் துபாய்க்கு சென்று இந்த வேலையை செய்திருந்தார் இர்பாஃன். அவரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அதற்கு மன்னிப்பு கேட்டு அந்த வீடியோவை யூடியூபில் இருந்து டெலிட் செய்தார். அதன் பின் அந்த பஞ்சாயத்து முடிந்தது.

பிரசவ அறை வீடியோ: இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் இர்பாஃனுக்கு பெண் குழந்தை பிறந்தது, குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆனநிலையில், தனது சேனலில் மனைவியின் பிரசவ வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில், ஆசிபா பிரசவ வலியால் அவதிப்பட்டதையும், நான் உன்னோடு தான் இருக்கின்றேன் என தனது அன்பை வெளிப்படுத்தி இருந்தார்.மேலும் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி இருந்தார்.

youtuber irfan letter

சர்ச்சையில் சிக்கினார்: இந்த வீடியோ இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது, பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தான் இந்த அறுவை சிகிச்சையை செய்ய வேண்டும் என்றும், தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்று மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு 10 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டு ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பிரசவம் பார்த்த மருத்துவர் மற்றும் இர்பாஃன் மீது செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

உள் நோக்கம் இல்லை: இந்நிலையில், யூடியூபர் இர்பாஃன் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து மருத்துவத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டத்தை மதிப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இர்பாஃன் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலமாக தனது இந்த கடிதத்தை யூடியூபர் இர்பாஃன் மருத்துவத்துறைக்கு அனுப்பி உள்ளார். அந்த கடிதம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ ஊரக நலப் பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தியிடம் சமர்க்கப்பட்டது.

youtuber irfan letter

தண்டிக்க வேண்டும்: இந்த செய்தி இணையத்தில் வெளியானதும் கடுப்பான இணையவாசிகள், இர்பாஃனுக்கு இதே வேலையாகி விட்டது.ஏற்கனவே கருவில் இருக்குடம் குழந்தை குறித்து அறிவித்து சர்ச்சையில் சிக்கினார். இப்போது, இந்த சர்ச்சை.எல்லாத்துக்கும் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா, ஒரு முறை தண்டனை கொடுத்தால் தான் அவர் திருந்துவார் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X