நாயிடம் இருந்து தங்கையை காப்பாற்றிய சிறுவன்.. பரிசு கொடுக்கும் அயன்மேன், ஸ்பைடர்மேன் நடிகர்கள்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: நாயுடன் போராடி தங்கையை மீட்ட குட்டி ஹீரோ பிரிட்ஜர் வாக்கரை பாராட்டி பரிசு கொடுக்கவும் முன் வந்துள்ளனர் அயன்மேன் மற்றும் ஸ்பைடர்மேன் நடிகர்கள்.

Recommended Video

அமேசானில் ஹெட்போன் ஆர்டர் செய்த நடிகை சோனாக்ஷிக்கு வந்தது பாருங்க - வீடியோ

அமெரிக்காவை சேர்ந்த 6 வயது சிறுவன் பிரிட்ஜர் வாக்கர் கடந்த ஜூலை 9ம் தேதி தனது தங்கையை கடிக்க வந்த நாயுடன் சண்டைப் போட்டு குட்டித் தங்கையை காயம் படாமல் காப்பாற்றி உள்ளார்.

ஆனால், அதன் பலனாக அவருக்கு கிடைத்ததோ 90 தையல்கள். சிறுவனின் செயலை அறிந்த அவனது அத்தை அதனை தனது இன்ஸ்டாகிராமில் போட்டு, அவென்ஞ்சர்ஸ் நடிகர்களை டேக் செய்து, சிறுவனின் காயம் ஆற ஆறுதல் சொல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

கேப்டன் அமெரிக்கா பாராட்டு

கேப்டன் அமெரிக்கா பாராட்டு

அந்த சிறுவனின் அத்தை நிக்கோல் நோயல் வாக்கர் போட்ட பதிவை முதலில் பார்த்த கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் எவான்ஸ், அந்த சிறுவனை பாராட்டி கடந்த ஜூலை 12ம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், சூப்பர் ஹீரோவுக்கு எந்த வகையிலும் நீ சளைத்தவன் இல்லை உனக்கு கேப்டன் அமெரிக்கா ஷீல்டை பரிசாக அனுப்பி வைக்கிறேன் எனக் கூறினார்.

அவெஞ்சர்ஸ் நடிகர்கள்

அவெஞ்சர்ஸ் நடிகர்கள்

தங்கை மீது வைத்திருந்த அளவு கடந்த பாசம் காரணமாக, தனது உயிரையும் பொருட்படுத்தாது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் போராடியதில், அந்த சிறுவனுக்கு, தலை முதல் கால் வரை ஏகப்பட்ட காயங்கள் உண்டாகின. சிறுவனின் இந்த தீரச் செயலை அறிந்த அவெஞ்சர்ஸ் நடிகர்களான ஹல்க் நடிகர் மார்க் ரஃபலோ, உள்ளிட்ட பலர் அந்த சிறுவனை வெகுவாக பாராட்டினர்.

அயன்மேன் நடிகர் வீடியோ

கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் எவான்ஸை தொடர்ந்து அயன்மேன் நடிகரான ராபர்ட் டவுனி ஜூனியர், அந்த சிறுவனுக்காக ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில், "பிரிட்ஜர், நீ ஒரு ராக்ஸ்டார், கிறிஸ் எவான்ஸின் ஷீல்டு கிஃப்ட் உன் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. நான் என்ன பண்ண போகிறேன் என்றால், உன் அடுத்த பிறந்தநாளுக்கு உனக்கு ஸ்பெஷல் கிஃப்ட் ஒன்றை அனுப்பி வைக்கிறேன் என பாராட்டும் பரிசு கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

உன் தங்கச்சி ரொம்ப லக்கி

அவெஞ்சர்ஸ் படங்களில் ஸ்பைடர்மேனாக நடித்து வரும் இளம் நடிகர் டாம் ஹாலண்ட் தனது வீடியோ மெசேஜில், உனது வீரத்தை கண்டு வியக்கிறேன். உன்னை போல ஒரு அண்ணன் கிடைத்ததற்கு உன் தங்கை கொடுத்து வச்சிருக்கணும், ஸ்பைடர்மேன் படத்தின் அடுத்த பாக ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. அந்த ஷூட்டிங்கை நீ எப்போ வேண்டுமானாலும், நேரில் வந்து பார்க்கும் வசதியை நான் ஏற்படுத்தி தருகிறேன் என வலியுடன் காயங்களை சுமந்து நிற்கும் அந்த குட்டி ஹீரோவை தேற்றியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X