இந்தியா வரும் அயர்ன்மேன்: விஜய் சேதுபதியால் கலக்கத்தில் ரசிகர்கள்

By Siva

சென்னை: அயர்ன்மேன் ராபர்ட் டவ்னி ஜூனியர் இந்தியா வருவதாக ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் வரும் 26ம் தேதி இந்தியாவில் ரிலீஸாக உள்ளது. அயர்ன்மேனுக்காக தமிழில் டப்பிங் பேசியுள்ளார் விஜய் சேதுபதி. அவரை டப்பிங் பேசுமாறு கேட்டுக் கொண்டதால் பேசினார்.

 Ironman promises to visit India soon

அயர்ன்மேனுக்கு விஜய் சேதுபதியின் குரல் செட்டே ஆகவில்லை என்று மார்வெல் ரசிகர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அயர்மேன் ராபர்ட் டவ்னி ஜூனியர் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள மார்வெல் ரசிகர்களிடம் பேசினார். ரசிகர்களின் அன்பை பார்த்து அவர் அசந்துவிட்டார். இந்திய ரசிகர்களின் அளவு கடந்த அன்பை பார்த்த ராபர்ட் டவ்னி ஜூனியர் விரைவில் இங்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

அய்யய்யோ, அயர்மேன் இந்தியா வருகிறார். தயவு செய்து யாரும் அவருக்கு விஜய் சேதுபதி டப்பிங் செய்ததை மட்டும் போட்டுக் காட்டிவிட வேண்டாம் என்று தமிழ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ராபர்ட் டவ்னி ஜூனியர் பிசியாக உள்ளார். தென் கொரியாவின் சியோல் நகரில் நடந்த விளம்பர நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X