லாக்டவுனால் சிக்கிக்கொண்ட நடிகர்..வீடியோ கான்பரன்ஸ் மூலம் அம்மாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற சோகம்!

By

மும்பை: லாக்டவுன் காரணமாக, சிக்கிக்கொண்டதால், தனது அம்மாவின் இறுதிச்சடங்கில் வீடியோ கான்பரஸ் மூலம் நடிகர் கலந்துகொண்டார்.

பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான். ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ள இவர், பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

அதில், அமேஸிங் ஸ்பைடர்மேன், லைஃப் ஆப் பை, ஜூராஸிக் வேர்ல்ட் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

அங்ரேஸி மீடியம்

அங்ரேஸி மீடியம்

இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் புற்றுநோய் ஏற்பட்டதை அடுத்து அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பெற்ற பின் நடித்த படம், அங்ரேஸி மீடியம். இதில் கரீனா கபூர், டிம்பிள் கபாடியா உட்பட பலர் நடித்திருந்தனர். ஹோமி அதஞ்சனா இயக்கி இருந்த இந்தப் படம் மார்ச் மாதம் 13 ஆம் தேதி வெளியாகி ஹிட்டானது.

லாக்டவுன்

லாக்டவுன்

படம் நன்றாக ஓடி கொண்டிருந்தபோதுதான் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகள் ரத்துச் செய்யப்பட்டன. இந்நிலையில் இர்பான் கானின் அம்மா, சயீதா பேகம் கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருந்தார். லாக்டவுன் காரணமாக இர்பான் சிக்கிக்கொண்டதால் அவரை பார்க்க முடியவில்லை.

நவாப் குடும்பம்

நவாப் குடும்பம்

ராஜஸ்தானில் வசித்து வந்த அவர், நேற்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 95. நவாப் குடும்பத்தைச் சேர்ந்த அவரது இறுதிச் சடங்கு ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் அவரது உறவினர்கள் கலந்துகொண்டனர். லாக்டவுனால் சிக்கிக்கொண்ட நடிகர் இர்பான் கான், இந்த இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவில்லை.

இறுதிச்சடங்கு

இறுதிச்சடங்கு

இதையடுத்து அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் அம்மாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளார். இதை அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்தி சினிமா பிரபலங்கள் இர்பான் கானை போனில் தொடர்பு கொண்டு தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். சமுக வலைத்தளங்களிலும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X