twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரைப்படமாகிறது ‘அக்னி சிறகுகள்’... அப்துல் கலாமாக இர்பான்கான்?

    |

    மும்பை: மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு இந்தி திரைப்படமாக உருவாக இருக்கிறது. பிரபல இயக்குநர் பிரமோத் கோர் இதற்கான முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மக்கள் மத்தியில் பிரபலமானவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவது தமிழைவிட இந்தியில் அதிகம். மேரிகோம், தோனி, அசாருதீன் என ஏற்கனவே படமாக்கப்பட்ட பிரபங்களின் வாழ்க்கை வரலாறு பட்டியல் நீளமானது.

    இந்நிலையில், தற்போது இந்தப் பட்டியலில் அப்துல்கலாமும் இணைய இருக்கிறார்.

    மக்கள் ஜனாதிபதி...

    மக்கள் ஜனாதிபதி...

    இந்தியாவை வல்லரசாக்க வலியுறுத்தி இளைஞர்களைக் கனவு காணச் சொல்லி, அக்னி நாயகனாக வலம் வந்தவர் அப்துல்கலாம். மண்ணில் இருந்து மறைந்தாலும், மக்கள் ஜனாதிபதியாக மக்கள் மனதில் அவர் என்றும் வாழ்ந்து வருகிறார்.

    நேரில் ஆய்வு...

    நேரில் ஆய்வு...

    இந்நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பிரபல மராத்திப் பட இயக்குநர் பிரமோத் கோர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கென அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு நேரில் சென்று அவர் ஆய்வு செய்துள்ளார்.

    கலாமின் புத்தகங்கள்...

    கலாமின் புத்தகங்கள்...

    அதோடு, அப்துல் கலாமின் அக்னி சிறகுகள், இந்தியா 2020 உள்ளிட்ட 22 புத்தகங்களையும் அவர் வாங்கி வைத்துள்ளாராம். அவற்றைப் படித்தும், நேரில் ஆய்வு செய்தும் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாற்றை அவர் படமாக்க திட்டமிட்டுள்ளார்.

    விருப்பம்...

    விருப்பம்...

    இது குறித்து பிரமோத் கோர் கூறுகையில், ‘இரண்டரை மணி நேரத்தில் அப்துல்கலாமின் முழு வாழ்க்கையையும் படமாக்க முடியுமா என்பது சந்தேகமே. ஆனல, முடிந்தவரை அனைத்தையும் சொல்ல விரும்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

    இர்பான்கான்...

    இர்பான்கான்...

    இந்தப் படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் இர்பான்கானை நடிக்க வைக்க பிரமோத் விருப்பம் தெரிவித்துள்ளார். இர்பானை விட வேறு யாரும் இந்த வேடத்திற்கு பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்பது அவரது நம்பிக்கை.

    அனுமதி...

    அனுமதி...

    அப்துல்கலாமின் உறவினர்களிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே, அப்துல்கலாம் பெயரில் கட்சி தொடங்கிய அவரது ஆலோசகர் பொன்ராஜூக்கு எதிராக, கலாம் குடும்பத்தார் வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    As per news sources, it is the Marathi filmmaker Pramod Gore who directed Reti (released last month) is toying with the idea of producing a Hindi film on the missile man of India.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X