»   »  பெற்றோர்களுக்கு பாடம் சொல்லும் இரு காதல் ஒரு கதை!

பெற்றோர்களுக்கு பாடம் சொல்லும் இரு காதல் ஒரு கதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாணவர்கள் படிக்க வேண்டிய வயதில் கவனம் சிதறாமல் நன்றாக படிக்க வேண்டும். தவறான விஷயங்களில் ஈடுபடுவதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை விளக்கும் படம் ‘இரு காதல் ஒரு கதை'.

டி.ஜே.மூவீஸ் லட்சுமி கதிர் தயாரிப்பில் பி.பன்னீர் செல்வம் இயக்கியுள்ளார். இப்படம் மாணவர்கள், பெற்றோர்களுக்கு நல்ல பாடமாக அமையும். இது அனைவரும் பார்க்கக்கூடிய ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்கிறார்.

ஜனா – அனு கிருஷ்ணா

ஜனா – அனு கிருஷ்ணா

இந்தப் படத்தில் ஜனா நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக அனுகிருஷ்ணா நடிக்கிறார். மற்றும் ஆதித்ய கிருஷ்ணா, கானா பாலா, பாண்டு, ராஜ்கபூர், மதுரை முத்து, டி.பி.கஜேந்திரன், ‘லொள்ளுசபா' சாமிநாதன், தேவதர்ஷினி, மீரா கிருஷ்ணா, உமா பத்மாநாபன், வினிதா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

5 பாடல்கள்

5 பாடல்கள்

இப்படத்திற்கு குஹா பாடல்களை எழுதி இசையமைக்கிறார். படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ள. அனைத்துப் பாடல்களும் அதிக பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் உள்ள ஐந்து பாடல்களும் ஐந்து விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது என இசையமைப்பாளர் குஹா கூறியுள்ளார்.

மகளின் தயாரிப்பில்

மகளின் தயாரிப்பில்

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. விழாவில் பேசிய அனைவரும் ‘இரு காதல் ஒரு கதை' என்ற அந்த படம் உருவானது எப்படி? என்று பேசினர். படத்தின் தயாரிப்பாளர் லட்சுமி, சினிமாவில் இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற கனவில் இருந்த அப்பாவுக்காக அவரை இசையமைப்பாளர் ஆக்கி ஒரு படத்தை தயாரித்துள்ளார்.

மகன் ஹீரோ அப்பா இசையமைப்பாளர்

மகன் ஹீரோ அப்பா இசையமைப்பாளர்

இயக்குநர் பன்னீர் செல்வமே அப்பாவை இசையமைப்பாளர் ஆக்கிய கையோடு லட்சுமியின் மகனையே இந்த படத்தில் ஹீரோவாக்கிவிட்டார். ஏதோ குடும்பத்தினரின் ஆசைக்காக உருவான படம் என்று அலட்சியமாக நினைக்காமல், இசையமைப்பாளர் குஹா. ஒவ்வொரு பாடலும் தெறிக்க விடும் ஹிட் ட்யூன்கள். பாடல்களை ஒருமுறை கேட்கும்போதே, திரும்ப திரும்ப மனசுக்குள் ரிப்பீட் ஆகும் கலக்கல் ட்யூன்கள் என்கின்றனர்.

கானா பாலாவின் பாடல்

கானா பாலாவின் பாடல்

படத்தில் ஒரு முக்கியமான பாடலை பாடியிருக்கும் கானா பாலா, ‘அந்த சகோதரி அவரோட அப்பாவுக்காக இந்த படத்தை எடுத்திருக்காங்க. அந்த சகோதரிக்காக நானும் ஒரு உதவி பண்ணணும்னு நினைக்கிறேன். நீங்க படம் ரிலீசப்போ சொல்லுங்க. என் செலவுல 10 ஆயிரம் போஸ்டர் அடிச்சு தர்றேன். அது மட்டுமல்ல, நான் இந்த படத்தில் பாடி நடிச்சதுக்கு உங்ககிட்ட முதல்ல ஒரு சம்பளம் கேட்டேன்ல? அது இப்போ வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இரு காதல் ஒரு கதை படத்தின் பாடல் வெளியீட்டு விழா, ஏதோ அவரவர் குடும்ப விழா போல நடந்து முடிந்ததாம்.

குடும்ப படம்

குடும்ப படம்

கல்வியின் முக்கியவத்துவத்தை விளக்கும் விதத்தில் இப்படத்தை எடுத்திருக்கிறோம். அதே சமயம் அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான படமாகவும் இருக்கும். இன்றைய காலகட்டத்திற்கு இப்படம் மிகவும் பயனுள்ள ஒரு படமாக இருக்கும்.

பெற்றோர்களுக்கு பாடம்

பெற்றோர்களுக்கு பாடம்

மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இப்படம் ஒரு பாடமாகவும் இருக்கும் என்று கூறியுள்ள இயக்குநர், தணிக்கைக் குழுவினர் இப்படத்திற்கு ‘யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர்," என்றும் கூறியுள்ளார் இயக்குநர்.

English summary
Iru Kadhal Oru Kadhai Audio Launch event held at Chennai. Gana Bala, Kalaipuli S. Thanu and others graced the event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil