»   »  ’யூனிபார்ம்’ வயதில் "ஐ லவ் யூ" வேணாமே... செம மெசேஜுடன் வருகிறது ‘இரு காதல் ஒரு கதை’

’யூனிபார்ம்’ வயதில் "ஐ லவ் யூ" வேணாமே... செம மெசேஜுடன் வருகிறது ‘இரு காதல் ஒரு கதை’

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டி.ஜெ.மூவிஸ் சார்பில் லட்சுமி கதிர் தயாரிப்பில், பன்னீர்செல்வம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘இரு காதல் ஒரு கதை'.

இப்படத்தில் நாயகர்களாக ஜனா, ஆதித்ய கிருஷ்ணா அறிமுகமாகின்றனர். நாயகியாக அனு கிருஷ்ணா நடிக்கிறார். இவர்கள் தவிர மீரா கிருஷ்ணன், உமாபத்மநாபன், தேவதர்ஷினி, மதுரைமுத்து, பாண்டு, டி.பி.கஜேந்திரன், ராஜ்கபூர், லொள்ளு சபா சாமிநாதன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படத்தின் தலைப்பைக் கேட்டாலே பக்கா காதல் கதை என்பது உறுதியாகிறது. இப்படத்தின் ஸ்டில்களில் நாயகன் மற்றும் நாயகி பள்ளிச் சீருடையில் உள்ளனர்.

அப்படிப்பட்ட படமல்ல...

அப்படிப்பட்ட படமல்ல...

அப்படியென்றால், பள்ளி மாணவர்களைத் தவறாக சித்தரிக்கும் படமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், இது நிச்சயம் அப்படிப் பட்ட படமல்ல என்கிறார் இப்படத்தின் இயக்குநர் பன்னீர்செல்வம்.

காதல் வேண்டாமே...

காதல் வேண்டாமே...

மேலும், தனது 'இரு காதல் ஒரு கதை' பற்றி பன்னீர்செல்வம் கூறுகையில், ‘படிக்கிற வயதில் காதல் வேண்டாம் என்பதே கதை. மாணவர்கள் படிக்கிற காலத்தில் வேறு விஷயங்களில் கவனம் செலுத்தினால் என்ன பின் விளைவுகள் ஏற்படும் என்பது திரைக்கதையாக்கப்பட்டுள்ளது.

நல்வழிப்படுத்தும் படம்...

நல்வழிப்படுத்தும் படம்...

மாணவர்களை நல்வழிப் படுத்துகின்ற படம் தானே தவிர, தவறாக சித்தரிக்கும் படமல்ல இது. மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்பதும் படத்தில் இருக்கும்.

படமல்ல பாடம்...

படமல்ல பாடம்...

மாணவர்கள் விஷயத்தில் பெற்றோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இப்படத்தில் பாடமாகச் சொல்கிறோம். சில பெற்றோரின் தவறான அணுகுமுறையால் கூட பிள்ளைகள் வழி தவறிப் போகிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.

விரைவில் ரிலீஸ்...

விரைவில் ரிலீஸ்...

சென்னை, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

English summary
Iru Kadhal Oru Kathai (aka) Iru Kadhal Oru Kadhai is a Tamil movie with production by TJ Movies, direction by P Panneer Selvam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil