»   »  இடத்தைச் சொல்லுங்க.. படம் காட்டுறோம்... டைசனுக்கு "இறுதிச் சுற்று" டீம் கடிதம்!

இடத்தைச் சொல்லுங்க.. படம் காட்டுறோம்... டைசனுக்கு "இறுதிச் சுற்று" டீம் கடிதம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இறுதிச்சுற்று படத்தை முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசனுக்காக பிரத்யேகமாக திரையிட்டுக் காட்ட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

கடந்த வாரம் வெளியான இறுதிச்சுற்று படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் நல்ல வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர்.

Irudhi Suttru Special Screening for Mike Tyson

இப்படத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இந்தப் படத்தை தான் பார்க்க விரும்புவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

I'd like to see this boxing film

Posted by Mike Tyson onMonday, February 1, 2016

அவரது இந்தப் பாராட்டும், விருப்பமும் படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தை அவருக்கு மட்டும் போட்டுக் காட்ட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

இதனையொட்டி அவருக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை ஒன்றை தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் அனுப்பி இருக்கிறது.

இடத்தைச் சொல்லுங்க.. படம் காட்டுறோம்... டைசனுக்கு இறுதிச் சுற்று டீம் கடிதம்!

அதில் எங்களுடைய தயாரிப்பான ‘இறுதிச்சுற்று' படத்தை பார்க்க தாங்கள் விருப்பம் தெரிவித்து பேஸ்புக் இணையதளத்தில் நீங்கள் வெளியிட்டிருந்த கருத்து எங்களை கௌரவிப்பதாக இருந்தது.

உங்களுக்கு படம் பார்க்க ஏதுவான இடத்தை நீங்கள் தேர்வு செய்துகொடுத்தால், உங்களுக்காக ‘இறுதிச்சுற்று' படத்தை பிரத்யேமாக திரையிட்டு காண்பிக்க தயாராக உள்ளோம்.

இடத்தைச் சொல்லுங்க.. படம் காட்டுறோம்... டைசனுக்கு இறுதிச் சுற்று டீம் கடிதம்!

உங்களை வடஅமெரிக்கா பாக்சிங் அசோசியேஷன் மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை அதனால் இந்தக் கடிதம் வாயிலாக தொடர்பு கொள்கிறோம்.

இந்தக் கடிதத்தின் வாயிலாக உங்களின் மேலான பதிலை எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தக் கடிதம் மூலம் மைக் டைசன் இந்தப் படத்தை மிக விரைவில் பார்த்து ரசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Irudhi Suttru Film Crew have Decided to screen this movie, Specifically for Former Boxer Mike Tyson.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil