Irugapatru Trailer: ஒரு ரப்பர் பேண்ட்ல விவாகரத்துக்கு விளக்கமா?.. இறுகப்பற்று ட்ரெய்லரே செம!
சென்னை: மாநகரம் ஸ்ரீ, சானியா ஐயப்பன், விக்ரம் பிரபு, ஸ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்நதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கணவன் மனைவி பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் தெளிவாக சொல்லும் விதமாக உருவாகி உள்ள இறுகப்பற்று படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
வாரிசு, துணிவு, பொன்னியின் செல்வன் 2, மாவீரன், மாமன்னன், ஜெயிலர், மார்க் ஆண்டனி என பிரம்மாண்ட படங்களும், பெரிய நடிகர்கள் நடித்த மாஸ் கமர்ஷியல் படங்கள் இந்த ஆண்டு வெளியான அதே வேளையில், டாடா, தீரா காதல், குட் நைட் உள்ளிட்ட ஃபீல் குட் படங்களும் வெளியாகி உள்ளன.

அந்த வரிசையில், யுவராஜ் தயாளன் இயக்கி உள்ள இறுகப்பற்று படமும் இருக்கும் என ட்ரெய்லரை பார்த்தாலே தெளிவாக தெரிகிறது.
லோகேஷ் கனகராஜ் பட ஹீரோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீ சமீபத்தில் மலையாள நடிகை சானியா ஐயப்பனை திருமணம் செய்து கொண்டது போல மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று ட்ரெண்ட் ஆனது.

அப்போதே அந்த புகைப்படம் இறுகப் பற்று படத்தின் போஸ்டர் தான் எனத் தெரிவித்திருந்தோம். இந்நிலையில், அந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
3 ஜோடிகள்: ஸ்ரீ - சானியா ஐயப்பன் ஜோடி, விதார்த் - அபர்ணதி ஜோடி, விக்ரம் பிரபு - ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடி என மூன்று ஜோடிகளை சுற்றித்தான் இறுகப் பற்று படத்தின் கதையை இறுக்கி உள்ளார் இயக்குநர்.
இந்த மூன்று பேருக்கும் திருமணமாகி, திருமணத்திற்கு பிறகு நடக்கும் பிரச்சனைகளையும் அதற்காக இயக்குநர் சொல்ல வரும் தீர்வு என்ன என்பது குறித்தும் தான் படத்தின் கதையே அமைந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

ரப்பர் பேண்ட்: ஏழு ஜென்மத்துக்கும் நீதான் என் மனைவி என்று சொல்லும் பல காதல் ஜோடிகளும் சில மாதங்களிலேயே விவாகரத்து செய்து பிரிந்து விடும் சூழல்கள் எதனால் உருவாகின்றன. கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்பதை ஒரு ரப்பர் பேண்டை வைத்து விளக்கம் கொடுத்துள்ள விதம் அற்புதம்.
ரப்பர் பேண்டை கணவனும் மனைவியும் ஆளுக்கொரு பக்கம் இழுத்தால் அறத்தான் செய்யும், அதை அப்படியே தூக்கிப் போடுவதும், மீண்டும் முடிச்சிப்போட்டு வாழ்வதும் அவரவர் கையில் தான் இருக்கு என ஒரே போடாக போட்டு விட்டார்.
சண்டை வர என்ன காரணம்: கணவன் - மனைவி இடையே சண்டை வர என்ன காரணம் என்கிற கேள்வியை முன்வைத்து கணவன் மனைவியாக இருப்பதும் ஒரு காரணம் தான் என வசனம் மூலமாகவும் காட்சி மூலமாகவும் நறுக்கென வைத்து இளம் ஜோடிகள் இமிடியேட் விவாகரத்தை நோக்கி செல்லாமல் இருக்க இறுகப்பற்று என டைட்டிலையும் வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











