இரும்புத்திரை 2: விஷாலுக்கு குளு குளு ஷ்ரத்தா ஸ்ரீநாத் கவர்ச்சிக்கு ரெஜினா கசாண்ட்ரா
Recommended Video
சென்னை: கடந்த ஆண்டு வெளிவந்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் விஷாலே தயாரித்து நடிக்கப்போவதாகவும், இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் ரெஜினா கசாண்ட்ராவும் நடிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகயுள்ளது.
இன்றைய நவீன உலகில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, மொபைல் ஃபோன்களால் நம்முடை சுதந்திரம் எந்த அளவுக்கு பறிபோகிறது, நம்மைச் சுற்றி ஆயிரம் கண்கள் நம்மை கவனித்துக்கொண்டு உள்ளது என்ற உண்மையை நமக்கு உணர்த்தி ஒருவித அச்சத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திய படம் தான் இரும்புத்திரை.

2018ஆம் ஆண்டில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால், அர்ஜுன், நடிகை சமந்தா உள்பட பலரது நடிப்பில் வெளியாகிய இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அப்போதே இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
அடுத்தடுத்து தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்துக்கொண்டிருந்த விஷாலுக்கு இரும்புத்திரை நல்ல திருப்பு முனையாக அமைந்தது என்றும் சொல்லலாம். விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் போதிய வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும், அந்த திரைப்படத்தை நடிகர் விஷால் தயாரித்து நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியானது. இந்த திரைப்படத்தின் தொடர்ச்சியை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்க மாட்டார்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆனந்த் இயக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனந்த் ஏற்கனவே இயக்குநர் எழிலிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த புதிய திரைப்படத்திற்கு இரும்புத்திரையின் சாயல் இருக்கும் என்றும், எனவே நடிகர் விஷால் இரும்புத்திரை 2 ஐ தலைப்பாக பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நாயகிகளாக ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகிய இருவரும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இந்த வாரம் துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











