இரும்புத்திரை இயக்குநரின் அடுத்த பட ஹீரோ யார்..? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

By Vignesh Selvaraj

சென்னை : விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த 11-ம் தேதி ரிலீஸான படம் 'இரும்புத்திரை' படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

விஷால் தயாரித்த 'இரும்புத்திரை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சக்ஸஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், பி.எஸ்.மித்ரனின் இரண்டாவது படத்தில் கார்த்தி நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Irumbuthirai director to direct Karthi

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் தான் சூர்யாவின் 'சிங்கம் 2' படத்தையும், ரஜத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தையும் தயாரிக்கிறது.

பி.எஸ்.மித்ரன், உதயநிதி ஸ்டாலின், விக்ரம் ஆகிய இருவரில் ஒருவரை இயக்கப்போகிறார் என்று கூறப்பட்ட நிலையில், கார்த்தியை இயக்கவிருக்கிறார். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக, ட்விட்டரில், " 'இரும்புத்திரை' படத்தின் வெற்றியைக் கொண்டாடும் நேரத்தில் அடுத்த படத்தைப் பற்றிப் பேசுவது ரொம்ப வேகமாகப் போவதாக இருக்கும் என நினைக்கிறேன். அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை முடித்தபிறகு படத்தின் அறிவிப்பை வெளியிடுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X