விஷால், சமந்தா நடிக்கும் 'இரும்புத்திரை' முதல் பார்வை ரிலீஸ்!
சென்னை : பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா நடிக்கும் திரைப்படம் 'இரும்புத்திரை'. இந்தப் படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கிறார்.
தற்போது 'இரும்புத்திரை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புப் பணிகள் சென்னையில் நடந்து வருகின்றன.
ரிச்சி ஸ்ட்ரீட், மவுன்ட் ரொடு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்
'இரும்புத்திரை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. டிஜிட்டல் திரைகளுக்கு நடுவே விஷால் முகம் தெரிவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த போஸ்டர். 'ஸ்பைடர்' படத்தின் கதையைப் போல இந்தப் படமும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அர்ஜூன்
ஆக்ஷன் கிங் அர்ஜூன், ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன், டெல்லி கணேஷ் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் உருவாகும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

பொங்கல் ரிலீஸ்
இப்படத்தைப் பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளதால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் ஆடியோ வெளியாகும். நடிகை சமந்தா திருமணத்திற்குப் பிறகு தமிழில் இந்தப் படத்தில் தான் நடித்து வருகிறார்.

க்யூட் சமந்தா
'இரும்புத்திரை' படத்தில் நடித்திருக்கும் சமந்தாவின் புகைப்படத்தை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். சேலையில் தேவதை போல ஜொலிக்கும் சமந்தாவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சமந்தா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலானது.


Click it and Unblock the Notifications











