Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மாஸ் ஓப்பனிங் வசூல் குவித்த 'இரும்புத்திரை'.. விஷாலின் பெஸ்ட் இதுதான்!
சென்னை : விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த 'இரும்புத்திரை' திரைப்படம் ரசிகர்களிடம் பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று தியேட்டர்களில் வசூல் அள்ளி வருகிறது.
டிஜிட்டல் இந்தியா திட்டங்கள், ஸ்மார்ட் போன், கேஷ்லெஸ் எகானமி ஆகியவற்றால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைச் சொல்லும் விதமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆதார், டிஜிட்டல் இந்தியா திட்டங்களைப் பற்றி தவறான கருத்தைப் பரப்பியிருப்பதாக பா.ஜ.க-வினர் சென்னையில் காசி தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் படத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு தள்ளுபடியானதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை வெளிவந்த விஷாலின் படங்களிலேயே இதுதான் அதிகபட்ச ஓப்பனிங் வசூல் செய்த படம் எனவும் கூறப்படுகிறது. இந்தப் படம் சென்னையில் மட்டுமே முதல் நாளில் 38 லட்சத்தை கடந்து வசூல் செய்தது. மூன்று நாட்களில் சென்னையில் மட்டுமே ரூ. 1.19 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
'இரும்புத்திரை' படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வீக்கெண்ட் நாட்களில் மட்டும் தமிழகம் முழுக்க ரூ. 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. விஷால் படங்களில் இதுதான் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் கொடுத்திருக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மட்டும் கடந்த மூன்று நாட்களில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' திரைப்படம் ரூ. 62 லட்சமும், கீர்த்தி சுரேஷ், சமந்தா, துல்கர் சல்மான் நடித்துள்ள 'நடிகையர் திலகம்' - 'மகாநதி' படம் ரூ. 54 லட்சமும் வசூல் செய்துள்ளது.
ஏற்கெனவே வெளிவந்து இன்னும் சில தியேட்டர்களில் மட்டும் ஓடிக்கொண்டிருக்கும் 'மெர்க்குரி' படம் சென்னையில் இதுவரை 2.08 கோடி ரூபாயும், 'தியா' படம் சென்னையில் 1.09 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கின்றன.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே