»   »  விஷால், சமந்தா நடிக்கும் 'இரும்புத்திரை' மோஷன் போஸ்டர், லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

விஷால், சமந்தா நடிக்கும் 'இரும்புத்திரை' மோஷன் போஸ்டர், லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஷால், சமந்தா நடிக்கும் 'இரும்புத்திரை' மோஷன் போஸ்டர்- வீடியோ

சென்னை : அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா ஆகியோர் நடித்துவரும் 'இரும்புத்திரை' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

'துப்பறிவாளன்' படத்தின் வெற்றியை அடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நடித்துவரும் 'இரும்புத்திரை' படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது.

'இரும்புத்திரை' படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு தயாரிப்பாளராகவும் இருக்கிறார் விஷால். விஷாலுக்கு ஜோடியாக சமந்தா இப்படத்தில் நடித்துள்ளார்.

இரும்புத்திரை

இரும்புத்திரை

விஷால், சமந்தா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடிக்கும் 'இரும்புத்திரை' படத்தின் படப்பிடிப்பு சென்னையின் முக்கியப் பகுதிகளில் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்பு பிஸியான பகுதியான ரிச்சி ஸ்ட்ரீட்டில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது.

மோஷன் போஸ்டர்

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் சில லேட்டஸ்ட் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன.

வில்லன் அர்ஜுன்

வில்லன் அர்ஜுன்

இத்திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக அர்ஜுன் நடித்திருக்கிறார். டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கிறது.

யுவன் இசை

யுவன் இசை

யுவன் ஷங்கர் ராஜா 'இரும்புத்திரை' படத்தின் இசையமைப்பாளராகப் பணிபுரிகிறார். படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

சமந்தா

சமந்தா

திருமணத்திற்குப் பிறகு நடித்துவரும் சமந்தா, இந்தப் படத்தில் செம க்யூட்டாக இருக்கிறார். சேலை அணிந்து ஹோம்லி லுக்கில் காட்சி தரும் சமந்தாவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

English summary
Vishal, Samantha and Arjun are starring 'IrumbuThirai' motion poster released officially. Some latest pictures of vishal and samantha were released on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil