For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஞானவேலை கலாய்த்து வசனம்.. - 'இரும்புத்திரை' இயக்குநர் சொன்ன பதில்!

  By Vignesh Selvaraj
  |
  சென்னை உயர்நீதிமன்றத்தில் இரும்புத்திரை படத்துக்கு எதிராக வழக்கு!- வீடியோ

  சென்னை : அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் நடித்திருக்கும் 'இரும்புத்திரை' படத்தின் முதல் பாதி திரையிடல் பத்திரிகையாளர்களுக்காக இன்று நடைபெற்றது. மறு பாதியை ரிலீஸ் நாளன்று திரையிடத் திட்டமிட்டுள்ளனர்.

  டீசர், ட்ரெய்லரில் காட்டப்பட்டபடியே, 'இரும்புத்திரை' திரைப்படம் சைபர் வார் எனப்படும் தகவல் தொழில்நுட்பப் போர் எனும் விஷயத்தை அடிப்படையாகக் கொண்டது. இணைய தகவல் திருட்டு மூலம் மக்கள பாதிப்புக்கு உள்ளாவது குறித்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

  படத்தின் முதல் பாதி திரையிடலுக்குப் பிறகு படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் சில கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

  இரும்புத்திரை கதை

  இரும்புத்திரை கதை

  ராணுவ வீரரான விஷாலுக்கு வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதிப்பது லட்சியம். அதிக வட்டிக்கு லோன் கொடுக்கும் வங்கி ஊழியர்களை விரட்டி விரட்டி வெளுப்பது போன்ற அடாவடித் தனங்களால் உளவியல் நிபுணர் சமந்தாவிடம் மனநல சான்றிதழ் பெறுவதற்காகச் செல்கிறார். இருவருக்குமிடையே காதல் உருவாவது படத்தின் ரொமான்ஸ் பார்ட்.

  சைபர் கொள்ளை

  சைபர் கொள்ளை

  இதற்கிடையே, குடும்பத்தின் முக்கியத் தேவைகளுக்காக விஷால் வங்கியில் சேர்த்து வைத்த பணம் சைபர் கொள்ளையர்களால் திருடப்படுகிறது. சைபர் கொள்ளையர்களைக் கண்டுபிடித்து விஷால் தனது பணத்தைப் பெற்றாரா, ராணுவ அதிகாரியாக நாட்டு மக்களுக்கு அவர் வெளிக்கொண்டு வந்த ரகசியம் என்ன என்பதெல்லாம் கதை.

  ரிலீஸ்

  ரிலீஸ்

  'இரும்புத்திரை' திரைப்படத்தில் ஆதார் அட்டைக்காக பெறப்படும் தகவலை நிறுவனங்கள் எளிதாகப் பெறமுடிவது குறித்தெல்லாம் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இப்படம் திரையரங்குகளில் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கிறது.

  முதல் பாதி திரையிடல்

  முதல் பாதி திரையிடல்

  ஏன் இப்படி பிரஸ் ஷோவில் ஒரு புதிய முயற்சி எனக் கேட்டதற்கு, "ஹாலிவுட்டில் இது வழக்கமான நடைமுறைதான். தமிழில் இதை நடைமுறைப்படுத்தி பார்க்கிறோம். முதல் பாதி இன்றும் அடுத்த பாதி படம் ரிலீஸ் ஆகும் தினத்தன்றும் பத்திரிகையாளர்களுக்கு போட்டுக் காட்டப்படும். இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து தொடர்ந்து இதே முறையை பின்பற்றலாம்" எனத் தெரிவித்தார்.

  ஆதார் வசனம்

  ஆதார் வசனம்

  பத்திரிகையாளர்களுக்கான முதல் பாதி பிரிவ்யூ ஷோ முடிந்தபிறகு, படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேசினார். ஆதார் பற்றிய தவறான கருத்தைச் சொல்லியிருப்பதாக எழுந்த புகார் பற்றிக் கேட்டதற்கு, " '500 ரூபாய் கொடுத்தாலே ஆதார் கார்டு தகவல் கிடைக்கும்' எனும் வசனத்தை சென்சார் போர்டு அனுமதித்துத்தான் படத்தில் பயன்படுத்தியுள்ளோம்." எனக் கூறியுள்ளார்.

  ஞானவேல் பற்றிய வசனம்

  ஞானவேல் பற்றிய வசனம்

  இப்படத்தின் ஒரு காட்சியில், காளி வெங்கட் அருகில் வெளிநாட்டைச் சேர்ந்த இளம்பெண் வந்து அமர்வார். அவர் பெயர் கேட்டதும், ஞானவேல் எனச் சொல்ல எழுந்து போய் விடுவார். 'ஞானவேல்னு சொன்னதும் எந்திரிச்சி போய்ட்டா' என்கிற ரீதியில் ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை மறைமுகமாகக் கலாய்க்கும் விதமாக இந்த வசனத்தை வைத்தீர்களா எனும் கேள்விக்கு, "இது திட்டமிட்ட வசனமெல்லாம் இல்லை. ஏதாவது ஒரு பெயர் வைக்கலாம் என்று முடிவெடுத்து யதேச்சையாக ஞானவேல் எனப் பெயர் வைத்தோம் எனக் கூறியுள்ளார் இயக்குநர்.

  சிக்கல்

  சிக்கல்

  'இரும்புத்திரை' படத்திற்கு நிலவி வரும் வினியோகஸ்தர் பிரச்னை, தடை வழக்கு குறித்த கேள்விகளுக்கு, "எல்லா சிக்கல்களும் தீர்க்கப்பட்டு திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை (மே 11) படம் வெளியாகும் எனக் கூறினார் இயக்குநர் மித்ரன்.

  English summary
  'Irumbuthirai' 1st half press show screening finished. Director Mithran clarifies some doubts about film.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X