தள்ளிப்போகும் விஷால் படம்... 'இரும்புத்திரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Recommended Video

சென்னை : பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா நடிக்கும் திரைப்படம் 'இரும்புத்திரை'. இந்தப் படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கிறார்.
தற்போது 'இரும்புத்திரை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
'இரும்புத்திரை' பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயிருக்கிறது.

வில்லன் அர்ஜுன்
இந்தப் படத்தில் விஷாலுக்கு வில்லனாக அர்ஜுன் நடித்திருக்கிறார். டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

மூன்றாவது லுக் ரிலீஸ்
படத்தின் மூன்றாவது பார்வை போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதில் விஷால் டி.வி, கம்ப்யூட்டர்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் குடோனிலிருந்து நடந்து வரும் காட்சி இடம்பெற்றிருக்கிறது.

யுவன் இசை
யுவன் ஷங்கர் ராஜா 'இரும்புத்திரை' படத்தின் இசையமைப்பாளராகப் பணிபுரிகிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் இரும்புத்திரை படம் உருவாகிறது.

சமந்தா
திருமணத்திற்குப் பிறகு நடித்துவரும் சமந்தா, இந்தப் படத்தில் செம க்யூட்டாக இருக்கிறார். சேலை அணிந்து ஹோம்லி லுக்கில் வெளியான சமந்தாவின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.
தள்ளிப்போன ரிலீஸ்
இப்படத்தைப் பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். நேற்று வெளியான போஸ்டரில் ஜனவரி 26 ரிலீஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, குடியரசு தினத்தன்று வெளிவர இருக்கிறது 'இரும்புத்திரை'.


Click it and Unblock the Notifications











