வசூல் குவித்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து'.. பல தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்!

By Vignesh Selvaraj

Recommended Video

இருட்டு அறையில் முரட்டு குத்து - விமர்சனம் #IruttuAraiyilMurattuKuththuReview

சென்னை : கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்க சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் நேற்று வெளியான படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. அடல்ட் காமெடி ஜானரில் உருவான இந்தப் படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பியிருப்பது பலரும் அறிந்த விஷயமே.

'ஹரஹர மஹாதேவகி' படத்திர்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இளைஞர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் க்ளீயர் 'A' படமாக ரிலீஸ் ஆனது. எதிர்பார்த்ததைப் போலவே இளைஞர்களின் வரவேற்பு இந்தப் படத்திற்குக் கிடைத்துள்ளது.

Iruttu Araiyil murattu kuththu collection in chennai

பல தியேட்டர்களில் இந்தப் படம் நேற்று ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகவும் ஓடியது. சென்னையில் மட்டும் இந்தப் படம் முதல் நாளில் ரூ. 34 லட்சம் வசூலித்துள்ளது. இந்த வீக்கெண்ட் முடிவில் சென்னையிலேயே ரூ. 1 கோடி வசூலித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் முழுக்கவே ரசிகர்கள் இப்படத்திற்கு நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளனர். கௌதம் கார்த்திக் நடித்த படங்களிலேயே இந்தப் படம் தான் டாப் ஓப்பனிங் வசூல் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு அடல்ட் வகையறா படங்களில் நடித்திருக்கும் கௌதம் கார்த்திக் தொடர்ந்து இதே சுழலில் சிக்கிக் கொள்வாரா என்பது தான் பலரின் கவலை. அடல்ட் படங்களின் வசூலால் மினிமம் கியாரண்டி வசூல் தரும் ஜானராக அது உருவாகி வருவதும் கவனிக்கத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X