இதுக்கு மேல கேவலமா டைட்டில் வைக்க முடியாது.. இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2வுக்கு?

சென்னை: இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வைக்கப்பட்டுள்ள டைட்டில் என்ன என்பது ரிவீல் ஆகி உள்ளது.

இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.

இந்த படத்தில் ஹீரோவாக கெளதம் கார்த்திக், நாயகிகளாக வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

அடல்ட் ஹாரர் காமெடி

அடல்ட் ஹாரர் காமெடி

தமிழ் சினிமாவில் ஜெகன் மோகினி திரைப்படத்திற்கு பிறகு அடல்ட் ஹாரர் காமெடி திரைப்படமாக வெளியானது இருட்டு அறையில் முரட்டு குத்து படம் தான். என்னடா டைட்டிலே பிட்டு பட டைட்டில் மாதிரி டபுள் மீனிங்கில் உள்ளது என நெட்டிசன்கள் பலரும் விளாசி தள்ளினர். படத்திலும், ஹாரர் மற்றும் காமெடியை தாண்டி அடல்ட் கன்டென்ட் அதிகரித்து இருந்தது.

நடிக்க மாட்டேன்

நடிக்க மாட்டேன்

இந்த படத்தில் நடித்து தனது பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டார் நடிகர் கெளதம் கார்த்திக். இரண்டாவது பாகத்தையும் எடுக்க இயக்குநர் தயாராக இருந்த நிலையில், ஏற்கனவே உடைச்சது பத்தாதா? ஆளை விடுடா சாமி என்கிற ரேஞ்சில் படத்தில் நடிக்க மாட்டேன் என தெறித்து ஓடிவிட்டார்.

ஹீரோ யார்

ஹீரோ யார்

கெளதம் கார்த்திக் மட்டுமின்றி கோலிவுட்டில் எந்தவொரு இளம் ஹீரோவும், ஏன் மார்க்கெட்டே இல்லாத ஹீரோக்களும் இந்த படத்தில் நடிக்க தயக்கம் காட்டி உள்ளனர். யாருமே நடிக்காத நிலையில், இயக்குநர் சந்தோஷே ஹீரோவாக களமிறங்க திட்டமிட்டுள்ளார். கோலிவுட்டில் இயக்குநர்கள் ஹீரோக்கள் ஆன வரிசையில் இவருக்கும் இப்போ இடம் கிடைத்திருக்கிறது.

அவங்களும் எஸ்கேப்

அவங்களும் எஸ்கேப்

முதல் பாகத்தில் கவர்ச்சி பொங்க நடித்திருந்த யாஷிகா ஆனந்த் மற்றும் வைபவி சாண்டில்யா ஆகிய இருவரும் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லையாம். அதற்கு பதிலாக மும்பையில் இருந்து கரிஷ்மா மற்றும் அக்ரித்தி என இரு நடிகைகளை இயக்குநர் களமிறக்கி உள்ளார். மேலும், சமீப காலமாக ஹாட்னஸை கிளப்பி வரும் ஷாலு சம்மு பேயாக மிரட்ட உள்ளாராம்.

என்ன டைட்டில்?

என்ன டைட்டில்?

தமிழ் சினிமாவில் அடல்ட் படங்கள் எடுக்கிறேன் என்கிற பெயரில் மிகவும் மோசமான டைட்டில்களை இயக்குநர்கள் வைத்து வருகின்றனர். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு கிடைத்த அனுமதி, பல்லு படாம பார்த்துக்கோ போன்ற அருவருப்பான டைட்டில்கள் முளைக்க காரணமானது. இந்த பார்ட் 2 படத்திற்கு ‘இரண்டாம் குத்து' என்ற படு கேவலான டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Roja சீரியல் வில்லியான Bigg Boss Yashika? • Zombie, Iruttu Araiyil Murattu Kuthu
யார் யார்

யார் யார்

இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. பிக் பாஸ் டேனி, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, சாம்ஸ் மற்றும் மனோ பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் முடிந்து சென்சார் சான்றிதழ் கூட கிடைத்து விட்டதாம், விரைவில் ஒடிடி தளத்தில் வெளியிட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X