டிஸ்கிளைமரை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்.. 'இருட்டு அறையில் முரட்டு குத்து' டபுள் மீனிங் நையாண்டி!

By Vignesh Selvaraj

Recommended Video

இருட்டு அறையில் முரட்டு குத்து - விமர்சனம் #IruttuAraiyilMurattuKuththuReview

சென்னை : சந்தோஷ் பி.ஜெயக்குமாரின் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், ஷா ஆரா மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கிறது 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம்.

அடல்ட் ஹாரர் ஜானர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க டபுள் மீனிங் வசனங்களாலும், காட்சிகளாலும் நிரம்பியிருக்கிறது. படத்தின் டைட்டில் போஸ்டரே ஆபாசமான உருவாகியிருந்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

Iruttu Araiyil murattu kuththu title card

அடுத்தடுத்து வெளியான டீசர், ட்ரெய்லர், பாடல்கள், ஸ்நீக் பீக் என எல்லாமே ஆபாச காட்சிகளையும், இரட்டை அர்த்த வசனங்களையும் கொண்டிருந்ததால் படத்திற்கு திரையுலகினர் மத்தியிலேயே எதிர்ப்பு உருவானது.

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் 'A'' சர்ட்டிஃபிகேட் பெற்ற இந்தப் படத்திற்கு குடும்பத்தோடு யாரும் வரவேண்டாம் என படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமாரே வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், இன்று திரையரங்குகளில் காட்சி ஒளிபரப்பானபோது, வழக்கமான டிஸ்கிளைமர் கார்டுகளோடு இன்னொரு ஸ்பெஷல் டிஸ்கிளைமரும் ஒளிபரப்பப்பட்டது. அதுவும் இரட்டை அர்த்தத்தோடு கூடியது.

"இந்தப் படம் ஆரம்பிக்க இன்னும் இரண்டு நிமிடங்கள் இருக்கு. அதுக்குள்ள டிஸ்யூ பேப்பர் எடுக்க வந்தவங்க தயவுசெய்து போய் எடுத்துட்டு வாங்க.. வாயும், கையும் துடைக்கிறதுக்கு பயன்படும்" என ஒளிபரப்பான டைட்டில் கார்டு ரசிகர்கள் பலரையும் சங்கடத்திற்குள்ளாக்கியது. இந்த டைட்டில் கார்டு பற்றி சமூக வலைதளங்களிலும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X