»   »  இருட்டு அறையில் முரட்டுக் குத்து: ஒன்னு இல்ல இரண்டு இல்ல மூன்று லட்டாம்...

இருட்டு அறையில் முரட்டுக் குத்து: ஒன்னு இல்ல இரண்டு இல்ல மூன்று லட்டாம்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் ஹீரோயின்கள் யார் என்று தெரிய வந்துள்ளது.

ஹர ஹர மகாதேவகி படம் ஹிட்டானதை அடுத்து இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமார், கவுதம் கார்த்திக் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ள அடல்ட் காமெடி படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து.

படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

இல்லை

இல்லை

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் ஓவியா நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் படத்தின் ஹீரோயின்கள் வைபவி சாண்டில்யா, ரஷ்மி கவுதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம்

சந்தானம்

வைபவி சந்தானத்துடன் சேர்ந்து சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா படங்களில் நடித்துள்ளார். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் பெரும்பாலான காட்சிகளை தாய்லாந்தில் படமாக்குகிறார்கள்.

தாய்லாந்து

தாய்லாந்து

முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதையடுத்து தாய்லாந்தில் படப்பிடிப்பு நடக்கிறது. படத்தில் பேயாக மூன்றாவது ஹீரோயின் உள்ளாராம். அந்த நடிகையை இன்னும் தேர்வு செய்யவில்லையாம்.

கோரிக்கை

கோரிக்கை

இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற தலைப்பை கேட்டாலே ஒரு மாதிரி இருக்கிறது. தயவு செய்து இந்த படத்தில் நடிக்காதீர்கள் என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் அவருக்கு கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vaibhavi Sandilya and Rashmi Gautham are the leading ladies of Gautham Karthik's upcoming movie Iruttu Araiyil Murattu Kuthu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X