'படத்தில் பிரிந்த காதல் ஜோடி நிஜத்தில் இணைந்தது'... '96' பட ஜுனியர்களின் லவ் ஃபீலிங்!

96 படத்தில் நடித்த ஆதித்யாவும், கௌரியும் காதலிப்பதாக செய்திகள் உலாவுகின்றன.

சென்னை: 96 படத்தில் நடித்த ஆதித்யாவும், கௌரியும் நிஜத்தில் காதலிப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.

96 படத்தில் விஜய் சேதுபதி, திரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர்கள் ஆதித்யா பாஸ்கரும், கௌரியும். யதார்த்தமான நடிப்பால் சீனியர்களையே தூக்கி சாப்பிட்டார்கள் இந்த ஜூனியர்கள்.

இவர்களின் இயல்பான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. படத்தில் பள்ளி முடிக்கும் முன்னே இந்த காதல் ஜோடி பிரிந்துவிடும். ஆனால் நிஜத்தில் இவர்கள் இணைவார்களா என்ற கேள்வி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக உலா வருகிறது.

இன்ஸ்ட்டாகிராம் பதிவு

இன்ஸ்ட்டாகிராம் பதிவு

இதற்கு காரணம் ஆதித்யாவின் இன்ஸ்ட்டாகிராம் பதிவு. கௌரியுடன் போஸ் கொடுத்து நிற்கும் ஆதித்யா, லவ் மூட் எமோஜிகளுடன் இந்த போட்டோவை பதிவிட்டார். அவ்வளவு தான். இதை பார்த்த எல்லோரும், இருவரும் காதலிப்பதாக நினைத்து செய்தியை பரப்பிவிட்டனர்.

பதிவை நீக்கிய ஆதித்யா

பதிவை நீக்கிய ஆதித்யா

சிறிது நேரத்தில் அந்த போட்டோவை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுத்துவிட்டார் ஆதித்யா. ஆனால் மற்றொரு வீடியோவில், "அவ முகத்த பாருங்க... மேரி ஜானு (என்னுடைய ஜானு)இளவரசி தானா? ஆமாம்," என பதிவிட்டுள்ளார்.

உறுதியான காதல்

உறுதியான காதல்

இதையெல்லாம் வைத்து கௌரியை, ஆதித்யா காதலிக்கிறார் என உறுதியே செய்துவிட்டார்கள் நெட்டிசன்கள். ஆனால் இந்த காதல் செய்தியை மறுத்திருக்கிறார் கௌரி.

காதலை மறுத்த கௌரி

காதலை மறுத்த கௌரி

அவருடையே பதிவில்," நானும் ஆதித்யாவும் காதலிக்கவில்லை. நாங்கள் காதலிப்பதாக உலவும் செய்தியை நம்ப வேண்டாம். பரப்பவும் வேண்டாம். படத்தில் நாங்கள் காதலிப்பது போல் நடித்தோம். நிஜத்தில் அப்படி எதுவும் இல்லை", என விளக்கமளித்துள்ளார்.

காதல் இல்லையா?

காதல் இல்லையா?

ஆனால் ஆதித்யா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இதனால் இது ஒருதலை காதலாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது. அதேநேரத்தில் படத்துக்கான புரொமோஷனாகக் கூட இது இருக்கலாம் எனவும் தோன்றுகிறது. ஒருவேளை இருவரும் காதலிப்பதாக இருந்தால்,நிஜத்திலாவது இணையுங்கள் என வாழ்த்துகிறார்கள் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Read more about: love காதல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X