இலக்கை எட்டாத “ ஆச்சார்யா “ படம்… ஏமாற்றத்தில் சிரஞ்சீவி ரசிகர்கள்

ஹைதராபாத் : சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இணைந்து நடித்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆச்சார்யா திரைப்படம் என்று திரை அரங்குகளில் வெளியானது.

இன்று அதிகாலையிலிருந்தே சிரஞ்சீவி ரசிகர்கள் கொண்டாட்டமான மனநிலையில் திரையரங்குகளில் சுற்றி வருகின்றன.

இன்று ரிலீஸ் ஆன ஆச்சாரியா படத்தின் விமர்சனம் வந்த வண்ணம் உள்ளது. முன்னதாக அமெரிக்காவிலிருந்து வெளியான விமர்சனம் கலவையாக காணப்படுகிறது.

தந்தை மகன் காம்பினேஷன்

தந்தை மகன் காம்பினேஷன்

இயக்குனர் Koratala Siva இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார் என அறிவிப்பு வந்த நாள் முதல் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியது. ஆச்சாரியா படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும் சில மாதங்களிலேயே இப்படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் இணைந்து நடிக்க உள்ளார் என தெரிந்ததும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. தொடர்ந்து நான்கு படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் Koratala Siva. ஆச்சார்யா அவரது ஐந்தாவது படம். RRR படம் நடிக்கும் போது ஆச்சார்யா படத்தை நடித்து முடித்தார் நடிகர் ராம் சரண். RRR படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஆச்சாரியா படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு கூடியது. ஆச்சார்யா படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இன்று ரிலீஸ் ஆன ஆச்சார்யா

இன்று ரிலீஸ் ஆன ஆச்சார்யா

ஆச்சார்யா படத்தின் ப்ரீ ரிலீஸ் பங்ஷன் கடந்த வாரம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதற்கு முன்னர் படத்தின் பாடல்கள் யூடியூபில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் இன்று ஆச்சார்யா திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸான ஆச்சார்யா படம் பார்த்த ரசிகர்கள் படத்தை படம் ஒரு முறை பார்க்கலாம் என்பது போல ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வந்தனர். இதனால் சிரஞ்சீவியின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் படத்தின் விமர்சனம் அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .

ட்விட்டர் விமர்சனம்

ட்விட்டர் விமர்சனம்

ஆச்சார்யா திரைப்படம் இந்துக் கோவில்களில் நடக்கும் அநியாயங்களை வெளியுலகிற்கு கொண்டு வரும் படமாக கதை களம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படம் பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து ட்விட்டர் மூலமாகவும், சில தனியார் டிவி சேனல்கள் மூலமாகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான ரசிகர்கள் படம் சுமார் என்பது போல பேசி வருகின்றனர். சிரஞ்சீவி போன்ற நடிகருக்கு ஏற்ற படம் இது இல்லை என சிலரும், இயக்குனர் Koratala Siva ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என சிலரும், இந்த படம் 40 வருடங்களுக்கு முன்பு ரிலீசாக இருந்தால் சூப்பர் ஹிட் ஆகி இருக்கும் எனவும் கருத்துக்கள் சொல்லி வருகின்றன.

நம்பர் ஒன் மொக்கை படம்

நம்பர் ஒன் மொக்கை படம்

தற்போது உள்ள காலத்தில் பொதுமக்கள் திரையரங்குகளுக்கு போகும் முன்பு படத்தின் ரிவ்யூ தெரிந்து கொள்கின்றனர். யூடியூபில் வரும் பப்ளிக் ரிஆக்சன்ஸ் பார்க்கின்றனர். இதனால் படத்தை ஒட்டி வரும் பப்ளிக் ரிவ்யூ முக்கியமானதாக இருக்கிறது. ஆச்சார்யா படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தான் ஒரு சிரஞ்சீவியின் வெறிபிடித்த ரசிகர் என்றும் இந்த படம் மொக்கை படங்களில் நம்பர்-1 மொக்கை படம் என குறிப்பிட்டுள்ளார். வேறு சிலர் RRR வெற்றிக்குப் பிறகு ராம் சரணுக்கு இது ஒரு மிகப்பெரிய தோல்விப்படம் என்று சொல்லி வருகின்றனர். படத்தில் இயக்கம் இசை எதுவும் எடுபடவில்லை என்றும் சொல்லி வருகின்றனர். படத்தின் விமர்சனம் கலவையாக இருந்தாலும் ஆச்சாரியா திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X