Kavin: விஜய் பயன்படுத்தும் கேரவன்தான் வேண்டும்.. கிஸ் படக்குழுவினரை டார்ச்சர் செய்தாரா கவின்?
சென்னை: நடிகர் கவின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. லிஃப்ட் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த கவினுக்கு டாடா படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றுக் கொடுத்தது.
இந்நிலையில் அடுத்தடுத்து ஸ்டார், ப்ளடி பெக்கர் படங்கள் கவின் நடிப்பில் ரிலீசாகின. ஆனால் இந்த படங்கள் டாடா அளவிற்கு சரியாக போகாத நிலையில் அடுத்ததாக கிஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் கவின். இதனிடையே, குட்டி சிவகார்த்திகேயனாக பார்க்கப்படும் கவின், கிஸ் பட சூட்டிங் ஸ்பாட்டில் அலப்பறைகளை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் கவின்: நடிகர் கவின் சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு சென்று வெற்றி கொடுத்தவர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவின் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் லிப்ட் படம் மூலம் இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். படம் ஓடிடியில் வெளியான நிலையிலும் சிறப்பான விமர்சனங்களை கவினுக்கு பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து டாடா, ஸ்டார், பிளடி பெக்கர் என அடுத்தடுத்த படங்கள் கவின் நடிப்பில் ரிலீசாகியுள்ளன. இதில் டாடா படம் கவினுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. ஸ்டார் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிலையில் பிளடி பெக்கர் படம் மோசமான விமர்சனங்களை பெற்று படுத்தே விட்டது.
கிஸ் படத்தில் கவின்: இந்நிலையில் அடுத்ததாக சதீஷ் மாஸ்டர் இயக்கத்தில் கவின் நடித்து வரும் கிஸ் படம் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி இணைந்துள்ளார். படத்தின் கதைக்களம் ரொமாண்டிக் ஜானரில் உருவாகி வரும் நிலையில் குட்டி எஸ்கே என கூறப்படும் கவின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பு தரப்பை டார்ச்சர் செய்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. விஜய் பயன்படுத்தும் கேரவன்தான் தனக்கு வேண்டும் என்று அவர் வம்படியாக கூறுவதாகவும் அந்த கேரவன் இல்லை என்றால் ஷூட்டிங்கை வேறு ஒரு நாளுக்கு தள்ளி வைக்கலாம் என்று அவர் கூறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கவின் மீது குற்றச்சாட்டு: விஜய் பயன்படுத்தும் கேரவன் மிகவும் அதிகமான வசதிகளுடன் காணப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இதன் வாடகை மிகவும் அதிகமாக இருக்கும் சூழலில், சமயத்தில் இந்த கேரவனை மற்ற முன்னணி நடிகர்கள் பயன்படுத்துவதால் நாம் கேட்கும் நேரங்களில் கிடைப்பதில்லை என்று தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை அடுத்த எஸ்கேவாக கூட இல்லாமல் அடுத்த விஜய்யாகவே கவின் நினைப்பதாகவும் அதனால் தான் இப்படி அலப்பறையை கூட்டுவதாகவும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
அடுத்தடுத்த அலப்பறைகள்: முன்னதாக சூட்டிங் ஸ்பாட்டில் லிஃப்ட் ஸ்லோவாக இருப்பதாக கூறி கேரவனுக்கு அவர் வந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது விஜய் பயன்படுத்தும் கேரவனை அவர் கேட்டதாக கூறப்படுகிறது. வளர்ந்து வரும் நடிகராக ரசிகர்களை கவர்ந்து வரும் கவின், இது போன்ற டார்ச்சர்களை கொடுப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து கவின்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











