அஜித்தின் 61வது படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!

சென்னை : நடிகர் அஜித் இப்போது இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் இன்னும் ஓரிரு மாதங்களில் ரிலீசாக உள்ளது

இந்த நிலையில் அஜித் மற்றும் ஹெச் வினோத் கூட்டணி மீண்டும் இணையும் அஜித்தின் 61வது படம் உறுதி செய்யப்பட்டிருக்க அதில் பிரபல மலையாள நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கஇருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அஜித்-ஹெச் வினோத் கூட்டணியில்

அஜித்-ஹெச் வினோத் கூட்டணியில்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம்,வேதாளம், விஸ்வாசம் ,விவேகம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அஜித் முதல் முறையாக ஹெச் வினோத் உடன் இணைந்த நேர்கொண்டபார்வை பிரபல ஹிந்தி படமான பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழில் எடுக்கப்பட்ட நேர்கொண்ட பார்வை அஜித்-ஹெச் வினோத் கூட்டணியில் உருவான முதல் திரைப்படமாகும்.

வழக்கறிஞர் கதாபாத்திரத்தில்

வழக்கறிஞர் கதாபாத்திரத்தில்

இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது முதல் முறையாக அஜித் இந்த படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் நடித்து பட்டையைக் கிளப்பி இருப்பார். குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை பற்றிய படம் என்பதால் அனைத்து தரப்பு மக்களிடமும் இந்த படம் அமோக வரவேற்பை பெற்றது

வலிமை

வலிமை

இந்த நிலையில் ஹெச் வினோத் அஜித் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் வலிமை. முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து இப்பொழுது ரிலீசுக்கு தயாராக உள்ளது. கடந்த பொங்கலுக்கு வலிமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது ஆனால் கொரோனா பரவல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கார்த்திகேயா வில்லனாக

கார்த்திகேயா வில்லனாக

எனவே இன்னும் ஓரிரு மாதங்களில் வலிமை ரிலீசாகும் என திரையுலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்து வருகிறார். காலா படத்தில் ரஜினிகாந்தின் காதலியாக நடித்த ஹுமா குரேஷி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார்

மோகன்லால்

மோகன்லால்

வலிமை ரிலீஸ் பீவர் இன்னும் குறையாத நேரத்தில் அஜித் மற்றும் ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது. அஜித்தின் 61வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. மோகன்லால் ஏற்கனவே தமிழில் உன்னைப்போல் ஒருவன் மற்றும் விஜய்யுடன் இணைந்து ஜில்லா படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் மோகன்லால் அஜித்துடன் முதல் முறையாக கூட்டணி அமைக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது கூடுதல் தகவல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X