Sharwanand :நிச்சயதார்த்ததுடன் நின்றுவிட்டதா சர்வானந்த் திருமணம்.. வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஐதராபாத் : தெலுங்கில் முன்னணி நடிகராக நடித்து வருபவர் நடிகர் சர்வானந்த். தமிழிலும் சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, கணம் போன்ற படங்களில் தமிழில் இவர் நடித்துள்ளார்.

இதில் கணம் படத்தில் டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு நடித்திருந்தார். இந்தப் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு நடிகை அமலா நடித்திருந்தார்.

Is Actor Sharwanand and Rakshitha reddys marriage cancelled with engagement?

சர்வானந்த் திருமணம் நிறுத்தப்பட்டதா? : தெலுங்கில் முன்னணி நடிகராக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் சர்வானந்த். தமிழிலும் எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, கணம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். இதில் எங்கேயும் எப்போதும் படத்தில் நாயகியிடம் மாட்டிக் கொண்டு திண்டாடும் கேரக்டரில் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்தது. முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

இந்தப் படத்தை தொடர்ந்து சேரன் இயக்கத்தில் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து சமீபத்தில் டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு வெளியான கணம் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தல் நீண்ட காலங்களுக்கு பிறகு நடிகை அமலா, சர்வானந்த்தின் அம்மாவா நடித்திருந்தார். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

தெலுங்கில் ஒக்கே ஒக்க ஜீவிதம் என்ற பெயரில் இந்தப்படம் வெளியானது. இதனிடையே கடந்த ஜனவரி 26ம் தேதி ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணுடன் சர்வானந்திற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மிகவும் விமரிசையாக நடைபெற்ற இந்த திருமணத்திற்கு முக்கியமான திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமண தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது.

Is Actor Sharwanand and Rakshitha reddys marriage cancelled with engagement?

இதையடுத்து சர்வானந்த் திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்று விட்டதாகவும் அவர் ரக்ஷிதாவுடன் பிரேக் அப் செய்து விட்டார் என்றும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இதுகுறித்து சர்வானந்த் எந்தவிதமான விளக்கமும் கொடுக்காத நிலையில் அவருக்கு நெருக்கமான குடும்ப நண்பர், இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஒரு மாதகாலமாக சர்வானந்த், லண்டனில் சூட்டிங்கில் பிசியாக இருந்துவிட்டு, தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார் என அவர் கூறியுள்ளார்.

Is Actor Sharwanand and Rakshitha reddys marriage cancelled with engagement?

இதையடுத்தே, அவரது குடும்பத்தினர் சர்வானந்தின் திருமணத்தை உறுதி செய்வார்கள் என்றும் விரைவில் அவரது திருமண தேதி உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்துவரும் சர்வானந்த், இத்தனை வயதை கடந்து தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள நிலையில், அதிலும் சிக்கலா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X