கிரிக்கெட் வீரர் பும்ராவை திருமணம் செய்யப் போகிறாரா தனுஷ் பட நடிகை? பரபரப்பு தகவல்!

சென்னை: கிரிக்கெட் வீரர் பும்ராவை பிரபல நடிகை திருமணம் செய்யப் போகிறாரா என்பது குறித்த தகவல் தீயாய் பரவி வருகிறது.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன்.

கொடி படத்தில் முட்டை வியாபாரம் செய்யும் பெண்ணாக முட்டை மாலதி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். துருதுரு பெண்ணாக அவர் நடித்திருந்த அந்த கேரக்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தெலுங்கில் செம பிஸி

தெலுங்கில் செம பிஸி

கொடி படத்திற்கு பிறகு அனுபமா பரமேஸ்வரன் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கில் செம பிஸியாக உள்ளார். தற்போது தமிழில் தள்ளிபோகாதே என்ற படத்திலும் தெலுங்கியில் 18 பேஜஸ் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

மறுப்பு, அன்ஃபாலோ

மறுப்பு, அன்ஃபாலோ

அண்மையில் கிரிக்கெட் வீரர் பும்ராவை அனுபமா காதலிப்பதாக தகவல் வெளியானது. பும்ரா அனுபமாவுடன் டேட்டிங் சென்றதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதனை இருவருமே மறுத்தனர். இதுபோன்ற கிசுகிசுக்கள் தொடரவே அனுபமாவை அன்ஃபாலோ செய்தார் பும்ரா.

வேலையில் கவனம்

வேலையில் கவனம்

இதனால் அந்த பிரச்சனை அதோடு முடிந்துவிட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தி வருவதாக கூறினார் அனுபமா பரமேஸ்வரன்.

அனுபமாவுடன் திருமணம்

அனுபமாவுடன் திருமணம்

இந்நிலையில் பும்ரா, அகமதாபாத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ளார். சில பர்சனல் காரணங்களால் விலகுவதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து நடிகை அனுபமாவுடன் அவருக்கு திருமணம் என்று தகவல் பரவி வருகிறது.

தகவலில் உண்மையில்லை

தகவலில் உண்மையில்லை

ஆனால் இதனை அனுபமாவின் பெற்றோர் மறுத்துள்ளனர். அனுபமா ஷூட்டிங்குக்காக பல ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார். ஆகையால் ஜஸ்பிரித் பும்ராவை திருமணம் செய்யப்போகிறார் என்ற தகவலில் உண்மையில்லை என்றும் கூறியுள்ளனர்.

மலையாள ஊடகம்

மலையாள ஊடகம்

அனுபமா தற்போது குஜராத்துக்கு ஷூட்டிங் சென்றிருப்பதாகவும் கூறியுள்ளனர். அனுபமாவின் தாயார் மலையாள ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை கூறியுள்ளார். அனுபமா தற்போது அதர்வாவின், தள்ளி போகாதே படத்தில் நடித்து வருகிறார்.

பலரையும் கவர்ந்துள்ளார்

பலரையும் கவர்ந்துள்ளார்

பும்ரா இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாக தனது பர்ஃபாமன்ஸால் ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X