என்ன சொல்றீங்க.. என் மகள் ஹீரோயினா நடிக்கிறாரா? மறுத்த ஆர்.கே.செல்வமணி!
சென்னை : நடிகை ரோஜா மகள் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக வெளியான தகவலை ஆர்.கே.செல்வமணி மறுத்துள்ளார்.
தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா செம்பருத்தி படத்தின் மூலம் தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதனை தொடர்ந்து இவர் பல ஹிட் படங்களில் நடித்தார்.

நடிகை ரோஜா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தர் ரோஜா, ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், பிரபு என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். அதே போல இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து பிரபலமானார்.

ரோஜாவின் மகள்
ரோஜாவின் மகள் அன்சுமாலிகா துருவ் விக்ரம் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாக உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாயின. மேலும்,இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக செய்திகள் இணையத்தில் கசிந்தன.

உண்மை இல்லை
இந்நிலையில், ரோஜாவின் கணவர் ஆர்.கே.செல்வமணி, மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பதே என் மகள் அன்ஷுமாலிகாவின் எண்ணம் படிப்பை முடித்துள்ள அன்சுமாலிகா தற்போது, பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். நான்கு ஆண்டுகள் அவர் அமெரிக்காவில் இருப்பார். அவர் படத்தில் நடிக்கப் போவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றார்.

அன்சுமாலிகா
ரோஜாவின் மகள் அன்சுமாலிகா 2021ம் ஆண்டு சிறந்த சமூக சேவகர் விருதை வென்றதன் மூலம் தனக்கென ஒரு பெயரைப்பெற்றார். மேலும், தி ஃபிளேம் இன் மை ஹார்ட் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். நீண்ட காலமாக சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்த வருகிறார் அன்சுமாலிகா.


Click it and Unblock the Notifications











