ஏகே 61.. அஜித்துக்கு ஜோடியாகும் 2 டாப் ஹீரோயின்கள்.. அந்த படத்தால் கிடைத்த அதிர்ஷ்டமா?

சென்னை: மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகும் 3வது படத்தில் அவருக்கு ஜோடியாக 2 ஹீரோயின்கள் நடிக்கப் போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

வலிமை திரைப்படம் வெற்றிகரமாக 2 வாரத்தை தியேட்டர்களில் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில், வலிமை படத்தின் வசூல் நல்லாவே உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ஏகே 61 படத்தின் மீது தான் அஜித் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் திரும்பி இருக்கிறது.

மோசமான விமர்சனம்

மோசமான விமர்சனம்

இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை திரைப்படம் பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை அஜித் வெளிப்படுத்தி இருப்பார். அந்த படத்திற்காக பல விமர்சகர்கள் நடிகர் அஜித்தை பாராட்டி இருந்தனர். ஆனால், மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படத்திற்கு பலரும் மோசமான விமர்சனங்களை அடுக்கும் அளவுக்கு அந்த படம் திரைக்கதை ரீதியாக சொதப்பியது தான் காரணம் என்கின்றனர்.

வினோத் கதையே இல்லை

வினோத் கதையே இல்லை

மேலும், வலிமை திரைப்படம் எச் வினோத் அஜித்துக்காக எடுக்க நினைத்த கதையே இல்லை என்றும் ஏகே 61 படத்தின் கதை தான் அஜித்துக்காக அவர் செதுக்கிய செம ஸ்க்ரிப்ட் என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருகின்றன. அதனால், ஏகே 61 தாறுமாறாக இருக்கப் போகிறது என்பதை ஃபர்ஸ்ட் லுக் பார்த்த உடனே ரசிகர்கள் திட்டவட்டமாக முடிவு செய்து விட்டனர்.

2 ஹீரோயின்கள்

2 ஹீரோயின்கள்

நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் வெறும் ஃபிளாஷ்பேக் காட்சிக்கு மட்டுமே வருவார் அவரும் ஒரே பாடலுடன் இறந்து போய் விடுவார். வலிமை படத்தில் இன்னொரு பாலிவுட் ஹீரோயினான ஹூமா குரேஷி இருந்தாலும், பெரிய அளவில் ரொமான்ஸ் காட்சிகளே இல்லாமல் போய் விட்டது. இந்நிலையில், ஏகே 61 படத்தில் அஜித்துக்கு 2 ஹீரோயின்கள் என தகவல்கள் கசிந்துள்ளன.

டபுள் ஆக்டிங்கா

டபுள் ஆக்டிங்கா

டெரர் வில்லனாகவும், ஸ்மார்ட் ஹீரோவாகவும் ஏகே 61 படத்தில் நடிகர் அஜித் 2 ரோல்களில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இரண்டு அஜித் இல்லை என்றும் ஒருவரே இருவர் போல மாறி நடிக்கவுள்ளார் என்றும் கிளைமேக்ஸில் தான் டபுள் ரோல் அல்ல சிங்கிள் அஜித் தான் என தெரியும் அளவுக்கு செம ட்விஸ்ட்டோட திரைக்கதை இருக்கும் என்றும் ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பி உள்ளன.

அதிதி ராவ்

அதிதி ராவ்

எப்படியோ ஏகே 61 படத்தில் இரண்டு அஜித் இருக்கும் பட்சத்தில், இரண்டு ஹீரோயின்களுக்கும் ரொமான்ஸ் காட்சிகளுக்கும் வேலை இருக்கிறதாம். அதில், ஒருவர் அதிதி ராவ் ஹைதரி என்பது இப்போதைக்கு கன்ஃபார்ம் ஆகி உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா உள்ளிட்ட தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார்.

ஹே சினாமிகா தந்த வாய்ப்பா

ஹே சினாமிகா தந்த வாய்ப்பா

கடந்த வாரம் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஹே சினாமிகா படத்தில் அதிதி ராவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அஜித்துக்கு ஜோடியாக நடிக்க அவர் கச்சிதமாக இருப்பார் என்பதன் காரணமாக அவரை ஏகே 61 படக்குழு புக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

வலிமை படப்பிடிப்பில் காயமடைந்த தல அஜித் | என்ன நடந்தது? | Filmibeat Tamil
இன்னொருவர் யார்

இன்னொருவர் யார்

ஏகே 61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவுடன் எல்லாம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், இப்போதைக்கு அதிதி ராவ் ஒருவர் தான் கன்ஃபார்ம் ஆகி உள்ளார் என்றும், இன்னொரு ஹீரோயின் பாலிவுட் இறக்குமதியாகத்தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் நடிகர்களின் பட்டியலையும் அப்டேட்டாக போனி கபூர் அறிவிக்க உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X