Real Maamannan: உதயநிதியை வைத்து கேம் ஆடிட்டாரா மாரி செல்வராஜ்.. ரியல் மாமன்னன் அதிமுக ஆளா?

சென்னை: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தில் அதிமுகவை சேர்ந்த தனபால் பற்றிய பயோபிக் கதை இருப்பதாக பெரிய பஞ்சாயத்தே ஓடிக் கொண்டிருக்கிறது.

சேலம், ராசிபுரம், பட்டியலின சமூகத்தில் இருந்த எம்.எல்.ஏ தமிழ்நாட்டின் சபாநாயகராக மாறும் கதையாக மாமன்னன் உருவாகி உள்ள நிலையில், அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதை தான் அது என சோஷியல் மீடியாவில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Is ADMK Ex Speaker Dhanapal is the real Maamannan?

பிரபல யூடியூப் விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமியும் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த ட்வீட்டை போட்டு பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்.

சபாநாயகர் ஆகும் வடிவேலு: பகத் ஃபாசில் முன்னாடி சாதாரண சேர் போட்டுக் கூட அமர முடியாத நிலையில் வைக்கப்படும் வடிவேலு கிளைமேக்ஸில் தமிழ்நாட்டின் உயரிய நாற்காலியான சபாநாயகர் நாற்காலியிலேயே அமரும் கதையை படமாக்கி உள்ளார் மாரி செல்வராஜ்.

இது கதையின் ஸ்பாயிலராக இருப்பதால் விமர்சனத்தில் கூட சொல்லாமல் தவிர்த்து வந்த நிலையில், தற்போது பல விமர்சகர்களே படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் குறித்தும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் தலைவர் குறித்தும் பகிரங்கமாக பேசி வருகின்றனர்.

Is ADMK Ex Speaker Dhanapal is the real Maamannan?

தனபால் தான் ரியல் மாமன்னனா?: இயக்குநர் மாரி செல்வராஜ் ஏகப்பட்ட குறியீடுகளுடன் படங்களை இயக்கி வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் இருந்து வந்த ஒரு பட்டியலின அரசியல் தலைவர் எப்படி தமிழ்நாட்டின் சபாநாயகராக மாறுகிறார் என்கிற கதையை படமாக்கி உள்ள நிலையில், அந்த சபாநாயகர் வேறு யாரும் இல்லை அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபால் தான் என பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளனர்.

விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமியும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனபால் புகைப்படத்தை பதிவிட்டு இந்த ட்வீட்டை போட்டுள்ளார்.

Is ADMK Ex Speaker Dhanapal is the real Maamannan?

உதயநிதிக்கு நன்றி தெரிவித்த தனபால்: இதில், ஹைலைட்டே என்னவென்றால், முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு பல மீடியாக்களில் இருந்து போன் கால்கள் பறந்து வரும் நிலையில், தன்னை சபாநாயகராக மாற்றி அழகு பார்த்தது தான் அம்மா தான் அவருக்குத் தான் இந்த பெருமை சேரும். என் கதையை தழுவி படமாக எடுத்ததற்கு தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

அதிமுக கட்சியை சேர்ந்தவர் பற்றிய படமாக மாரி செல்வராஜ் இந்த படத்தை எடுத்தாரா? அல்லது அதிமுகவினர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனரா என பெரும் விவாதங்கள் திமுகவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X