மீண்டும் ஜோடி சேரும் தேவதாஸ் ஜோடி... ஷாரூக்- ஐஸ்வர்யாராய்!

மும்பை: ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்க உள்ள புதிய படத்தில் ஐஸ்வர்யாராய் நாயகியாக நடிக்க உள்ளாராம். முன்னதாக இப்படத்தில் கஜோல் நடிக்க உள்ளதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அபிஷேக்பச்சனைத் திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார் ஐஸ்வர்யாராய் பச்சன். ஆனால் கடந்த 2011ம் ஆண்டு குழந்தை பிறந்தவுடன், நடிப்பதை நிறுத்திக் கொண்டார் ஐஸ்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் சஞ்சய் குப்தா இயக்கத்தில் ஜஸ்பா என்ற இந்தி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் ஐஸ்வர்யா ராய்.

Is Aishwarya Rai in a comeback spree?

இதற்கிடையே மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் மீண்டும் மறுபிரவேசம் ஆவார் எனவும் தகவல்கள் வெளியானது. ஆனால், பின்னர் இந்தி படத்தின் மூலம் ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிக்க வருவது உறுதி ஆனது.

மீண்டும் தொடர்ச்சியாக நடிப்பாரா அல்லது மாட்டாரா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்த நிலையில், ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மாவுடன், கரன் ஜோகரின் ஏ தில் ஹய் முஸ்கில் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஐஸ்வர்யா ராய்.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் பச்சன் மேலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இது பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக் கான் கதாநாயகனாக நடிக்கும் படம்.

முன்னதாக இந்த படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை காஜோல் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது கஜோலுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராய் பச்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மதுபாலா, கிஷோர் குமார் நடிப்பில் வெற்றி பெற்ற சல்டி கா நாம் காடி என்ற படத்தின் ரீமேக் தான் இது. ரோஹித் ஷெட்டியும், அஜய் தேவ்கனும் நல்ல நண்பர்கள் என்பதால் இந்தப் படத்தில் ஷாரூக் ஜோடியாக கஜோல் நடிப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால், கஜோல் தனது வேறு பல வேலைகளில் பிசியாகி விட்டதால், தற்போது அந்த வாய்ப்பு ஐஸ்வர்யாராய் கைக்கு மாறியுள்ளது.

ஏற்கனவே தேவ்தாஸ் படத்தில் ஷாருக் கானுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராய் பச்சன், தற்போது மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளதால், பாலிவுட்டில் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா ராய் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க மாட்டாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தொடர்ந்து இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் அவர் ஒப்பந்தமாகி வருவது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X