ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா?: உண்மை இது தான்
Recommended Video

மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக எழுந்த பேச்சு குறித்து அவரின் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் கோவாவுக்கு சென்றார். அங்கு அவர்கள் கடற்கரையில் நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது.
அந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் வயிறு சற்று பெரிதாக இருந்ததால் அவர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என்ற பேச்சு கிளம்பியது.

ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இல்லை. புகைப்படம் எடுக்கப்பட்ட ஆங்கிள் மோசமாக இருந்ததால் அப்படி தெரிந்துள்ளது என்று அவரின் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

மகிழ்ச்சி
என் படங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடுவதை தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் விட்டுவிடுவேன். நான் ஒரு அருமையான ஸ்க்ரிப்பட்டை கேட்டு ஓகே சொல்லியுள்ளேன். அது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என்று ஐஸ்வர்யா ராய் அண்மையில் தெரிவித்தார்.

அபிஷேக் பச்சன்
ஐஸ்வர்யா ராய் தனது கணவருடன் சேர்ந்து குலாப் ஜாமூன் என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இரண்டு பேருமே அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டனர். இதனால் அவர்களை படத்தில் ஜோடியாக பார்க்க காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ப்ரியங்கா சோப்ரா
முன்னதாக பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அவரின் வயிறு பெரிதாக தெரிந்ததால் அவர் கர்ப்பம் என்று கூறப்பட்டது. ஆனால் கேமராவின் ஆங்கிள் சரியில்லாததால் அப்படி தெரிந்ததாக பின்னர் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











