ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா? இல்லையா?...பட்டிமன்றமே நடத்திய நெட்டிசன்கள்
புதுச்சேரி : பாலிவுட்டில் திறமையான நடிகை என பெயர் எடுத்தவர் ஐஸ்வர்யா ராய். திருமணத்திற்கு பிறகு தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய எந்த செய்தியும் மீடியாக்களில் பரவாத அளவிற்கு தன்னை மாற்றிக் கொண்டார்.
தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா. புதுச்சேரியில் நடக்கும் ஷுட்டிங்கில் பங்கேற்க தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராதியாவுடன் சென்றுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் இரட்டை வேடங்களில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாராம். அதில் ஒன்று நந்தினி கேரக்டராம். சரத்குமாரின் மனைவி ரோலில் தான் ஐஸ்வர்யா நடிப்பதாக கூறப்படுகிறது.

வரலட்சுமி பகிர்ந்த ஃபோட்டோஸ்
இந்நிலையில் புதுச்சேரி சென்ற நடிகை வரலட்சுமி, ஐஸ்வர்யா ராயை நேரில் சந்தித்து, அவர் குடும்பத்துடன் ஃபோட்டோவும் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த ஃபோட்டோக்களை கடந்த வாரம் வரலட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா
இதில் தனக்கே உரிய எளிமையான கருப்பு நிற உடையில் இருந்தார் ஐஸ்வர்யா ராய். இந்த ஃபோட்டோக்களை பார்த்து விட்டு நெட்டிசன்கள் பலர், ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பராக இருக்கிறார். அதனால் தான் ஷுட்டிங்கிற்கு போன இடத்தில் கணவர் மற்றும் மகளுடன் சென்றுள்ளார் என கொளுத்தி போட்டனர்.

கிளப்பி விட்ட நெட்டிசன்கள்
உடனே மேலும் சிலர், ஆமாம், அதனால் தான் வரலட்சுமியுடன் இருக்கும் ஃபோட்டோக்களில் வயிற்றை கையை வைத்து மறைத்துக் கொண்டும், மற்றவர்களுக்கு பின்னால் மறைந்து கொண்டும் இருக்கிறார் என்றும் கிளப்பி விட்டனர்.
Recommended Video

வெயிட் போடுறது தப்பா
கர்ப்பமாக இருப்பதால் தான் ஐஸ்வர்யா பார்க்க ரொம்ப அழகா இருக்கார் என்று வேறு சிலர் கமெண்ட் செய்தனர். இதை பார்த்து கடுப்பான மற்றொரு குரூப், ஏன் எல்லாரும் அவர் கர்ப்பத்தை பற்றியே கேள்வி எழுப்புகிறீர்கள். அவர் கொஞ்சம் வெயிட் போட்டிருக்கார் அவ்வளவு தான்.

கர்ப்பமா இருந்தா என்ன
வயது காரணமாக முகத்தில் மாற்றமும், கொஞ்சம் உடல் எடை கூடியும் உள்ளார். இதில் என்ன தவறு உள்ளது. அவர் கர்ப்பமாக இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? என பதிலடி கொடுத்து கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











